“டிராவிட் சச்சின் பேரை சேர்த்து எனக்கு வெச்சது அதிர்ஷ்டம்.. கான்வே இருந்தது ரொம்ப நல்லதா போச்சு!” – ஆட்டநாயகன் ரச்சின் ரவீந்தரா பேட்டி!

0
3070
Rachin

இன்று உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 23 வயதான இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்தரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணிக்கு அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்!

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேயுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 273 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் 82 பந்துகளில் சதம் அடித்து ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு வேகமாக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் 96 பந்துகளை சந்தித்த ரச்சின் ரவீந்தரா 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 123 ரன்கள் அதிரடியாக அடித்து களத்தில் நின்றார்.

இவருடைய பூர்வீகம் இந்தியா ஆகும். இவரது தந்தை சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் இருவரது விசிறி. இதன் காரணமாக இவருக்கு பெயர் வைக்கும் பொழுது, இருவரது பெயரையும் இணைத்து ரச்சின் ரவீந்தரா என பெயர் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ரச்சின் ரவீந்தரா பேசும்பொழுது “சில நேரங்களில் விஷயங்கள் நம்ப முடியாமல் இருக்கும். ஒரு நல்ல நாளை கழிப்பது அற்புதமானது. எங்களது பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசி மேலும் எங்கள் வீரர்கள் நன்றாக பீல்டிங் செய்து இங்கிலாந்து அணியை 280 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்கள்.

கான்வேயுடன் இணைந்து விளையாடுவது அதிர்ஷ்டம். அவருடன் இணைந்து நான் நிறைய பேசுகிறேன். என்னுடைய நெருக்கமான நண்பராக அவர் இருக்கிறார். அவர் களத்தில் இருந்தது எனக்கு மேற்கொண்டு செல்வதற்கு எளிதாக இருந்தது.

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக வருவார் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். நேற்று லாக்கி பெர்கூசனுக்கு சிறிது நிக்கில் இருந்தது. நான் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்வேன் என்று தெரியும். கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டேன்.

மேலும் எனக்கு இரண்டு லெஜெண்டுகளான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரது பெயரையும் சேர்த்து வைத்தது அதிர்ஷ்டமான ஒன்று. இதற்கு மிகவும் மகிழ்ச்சி!” என்று கூறி இருக்கிறார்!