டீம்ல என் பேர் இல்லாதத பாத்து திடுக்கிட்டேன்.. ருதுராஜ் நல்லா இருக்கட்டும் – மௌனம் கலைத்த ஷிகர் தவான்!

0
1407
Shikar

இந்திய அணி நிர்வாகம் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கான தயாரிப்புகளில் இருந்த பொழுது, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை ஷிகர் தவான் வழி நடத்தினார். அந்தத் தொடரில் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணிக்குள் வந்தார்.

அதற்கடுத்து உடனே ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடர் இருந்ததும், தவான் இடமிருந்த தற்காலிக கேப்டன் பொறுப்பை உடனே காயத்தில் இருந்து திரும்பி வந்த கே.எல்.ராகுல் இடம் ஒப்படைத்தார்கள்.

- Advertisement -

இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு சென்று ஆஸ்திரேலியாவில் தோல்வியடைந்து திரும்பியது. இதற்கு அடுத்து நியூசிலாந்து சென்ற இந்திய அணிக்கு மீண்டும் ஷிகர் தவான் கேப்டன் ஆக்கப்பட்டார். அந்தத் தொடரில் அவரது பேட்டிங் கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது.

இதற்கு அடுத்து இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராகியது. இந்த தயாரிப்பில் சுப்மன் கில்லை வைத்துக் கொண்டு ஷிகர் தவானை அதிரடியாக கழட்டி விட்டது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம். நடந்த மொத்தத்திற்கும் ஒரு நாள் கூட ஷிகர் தவான் தரப்பில் இருந்து அதிருப்தி வந்தது கிடையாது.

தற்பொழுது சீனாவில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அனுப்புகிறது. இதற்கு பயிற்சியாளராக லட்சுமணன் மற்றும் கேப்டனாக ஷிகர் தவான் இருவரும் இருப்பார்கள் என்று கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக செய்து வந்தது. இந்த நிலையில் திடீரென்று அவரை கேப்டன் ஆக்காததோடு அணியிலும் சேர்க்காமல் ருதுராஜை கேப்டனாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து தற்போது பேசி உள்ள ஷிகர் தவான் “ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இல்லாத பொழுது நான் முதலில் அதிர்ச்சி அடைந்தேன். பிறகு அவர்கள் ஏதோ வித்தியாசமாக செய்கிறார்கள் என்று நினைத்தேன். நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ருதுராஜ் அணியை வழிநடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்து இளம் வீரர்களும் அணியில் இருக்கிறார்கள். அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

நிச்சயமாக நான் மீண்டும் இந்திய அணிக்குள் வருவதற்கு நம்பிக்கையாக இருக்கிறேன். மீண்டும் வருவதற்கு எனக்கான வாய்ப்பு ஒரு சதவீதமோ அல்லது 20% ஆனால் வாய்ப்பு என்பது இருக்க செய்கிறது. நான் இன்னும் பயிற்சியை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறேன். நான் விளையாட்டை ரசிக்கிறேன். இதுதான் எனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்கள். இதைத் தாண்டி எந்த முடிவுகள் எடுக்கப்பட்டாலும் நான் அதை மதிக்கிறேன்.

நான் எந்தத் தேர்வாளர்களிடமும் என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி பேசியது கிடையாது. நான் என்சிஏவுக்கு தொடர்ந்து செல்கிறேன்.அங்கு வசதிகள் சிறப்பாக உள்ளன. அங்கு நான் மகிழ்ச்சியாக என் நேரத்தை செலவிடுகிறேன். என்சிஏ எனது வாழ்க்கையை வடிவமைத்து உள்ளது. அதற்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். மேலும் ஐபிஎல் விஜய் ஹசாரே மற்றும் சையத் முஸ்டாக் அலி தொடர்களுக்கு நான் தயாராக வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!