சிஎஸ்கேல எனக்கு கிடைக்கும் மரியாதை வேறு, டெல்லி கொல்கத்தா அணிகளில் கிடைத்த மரியாதை வேறு – ரகானே ஓப்பனாக பேட்டி!

0
6230

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளில் எனக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை சிஎஸ்கே அணியில் எனக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கிறது அதனால் என்னால் வெளிப்படுத்த முடிகிறது என்று பேட்டியளித்துள்ளார்

ராஜஸ்தான் அணிக்காக தொடர்ந்து பல வருடங்கள் விளையாடி வந்த ரகானே, கடந்த 2021ஆம் ஆண்டு வீரர்கள் பரிமாற்றும் முறைப்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். அங்கு இவருக்கு போதிய வாய்ப்புகளை அணி நிர்வாகமும் அணியின் கேப்டனோ கொடுக்கவில்லை. ஓரிரு போட்டிகள் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார்.

- Advertisement -

அதற்கு அடுத்த வருடமே கொல்கத்தா அணிக்கு சென்ற ரகானேவிற்கு அங்கேயும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த சில போட்டிகளில் சரியாக வெளிப்படுத்தவில்லை என்கிற காரணத்திற்காக வெளியேற்றப்பட்டார். மேலும் கடந்த டிசம்பர் மாதம் ஏலத்திற்கு முன்பு அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார்.

ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இவரை 50 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. அப்போது இவரை எதற்காக எடுத்தீர்கள் என்று பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். சிஎஸ்கே அணியில் முதல் இரண்டு லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மூன்றாவது லீக் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முக்கிய வீரர்களான பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோர் இல்லாததால் இந்த வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இதனைப் பயன்படுத்திக்கொண்டு வெறும் 29 பந்துகளில் 63 ரன்கள் விளாசி, சிஎஸ்கே அணி அபாரமாக வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். அடுத்ததாக ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் நடந்து முடிந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடினார்.

குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 29 பந்துகளில் 71 ரன்கள் விளாசினார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், டெல்லி கொல்கத்தா அணியில் விளையாடியதற்கும், சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்க்கும் உள்ள வித்தியாசம் பற்றி பேசினார். ரகானே பேசியதாவது:

“நான் என்னுடைய பேட்டிங்கை என்ஜாய் செய்தேன். என்னுடைய சிறப்பான ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன். இந்த பார்மை நான் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு இங்கு வாய்ப்புகள் கிடைப்பதால் நன்றாக வெளிப்படுத்த முடிகிறது.

கடந்த ஒன்று இரண்டு ஆண்டுகளாக எனக்கு இப்போதைய வாய்ப்புகள் கிடைக்க முடியவில்லை. (கொல்கத்தா, டெல்லி அணியில் வாய்ப்புகள் கிடைத்தால் தானே வெளிப்படுத்த முடியும்). ஆகையால் என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

தோனி கேப்டன்ஷிப் கீழே விளையாடினால் நிறைய கற்றுக் கொள்ளலாம் ஒரு பேட்ஸ்மேன் ஆக மற்றும் கிரிக்கெட் வீரராக எப்போதுமே நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்போம். என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனையே இங்கே நான் விளையாடும் பொழுது எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது.

சிஎஸ்கே அணி என்னை எடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. முதலாவதாக எனக்கு வாய்ப்புகள் கொடுத்து என்னுடைய சுதந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் அறிவுறுத்துகிறார்கள்.” என்றார்