‘ 21 பந்தில் 11 ரன்கள் ‘ ; 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தன் மோசமான ஆட்டத்திற்கு இதுதான் காரணம் – யுவராஜ் சிங் வெளிப்படைப் பேச்சு

0
4626
Yuvraj Singh about 2014 T20WC Final

2014ம் ஆண்டு பங்களாதேசில் நடந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரை அவ்வளவு எளிதில் இந்திய ரசிகர்கள் யாரும் மறந்துவிட மாட்டார்கள். அந்தத் தொடரின் லீக் போட்டிகளில் இந்திய அணி அனைத்து போட்டியிலும் வெற்றி கண்டிருந்தது. மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

அரை இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியையும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நடைபெற்றது. எப்படியும் இந்திய அணி தான் வெற்றி பெறப் போகிறது என்று அனைவரும் நம்பி இருந்த நிலையில் இந்திய அணி அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் தோல்வி அடைந்தது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 130 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணியில் விராட் கோலி மட்டுமே அதிரடியாக விளையாடி 58 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய இலங்கை அணி 17.5 ஓவர் முடிவிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் ஐசிசி டி20 உலக கோப்ப கோப்பையை கைப்பற்றியது.

இறுதிப்போட்டியில் சுமாராக விளையாடிய யுவராஜ் சிங்

இந்திய அணிக்கு ஐசிசி தொடர் என்று வந்துவிட்டாலே மிக அற்புதமாக யுவராஜ் சிங் விளையாடுவார். ஆனால் அந்த இறுதி போட்டியில் மட்டும் யுவராஜ் சிங் மிக சுமாராக விளையாடினார். 21 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அன்று அவர் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த போட்டியில் யுவராஜ் சிங் கடைசி நேரத்தில் சற்று அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயமாக இந்திய அணி இன்னும் சற்று ரன்கள் குவித்திருக்கும். அவர் அன்று அதிரடியாக விளையாட காரணத்தினாலேயே இந்திய அணி தோல்வியடைந்தது என்று ரசிகர்கள் ஒரு பக்கம் அவரை தற்போது வரை குறை கூறி வந்த வண்ணம் இருக்கின்றனர்.

அன்று நான் அப்படி விளையாடியதற்கு இதுதான் காரணம் – யுவராஜ் சிங்

2011ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடந்த வேளையில் நான் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தேன். இந்திய அணியில் இருந்து நான் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்கிற சூழ்நிலையில் இருந்தேன். இது முறையான காரணமில்லை என்றாலும், இந்திய அணி மேனேஜ்மெண்ட் எனக்கு உறுதுணையாக இல்லை.

இறுதிப்போட்டியில் என்னால் பந்துகளை நான் நினைத்தவாறு அடிக்க முடியவில்லை. குறிப்பாக ஆப் ஸ்பின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடிக்க முயற்சிக்கையில் நான் நினைத்த படி என்னால் அடிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே நிறைய டாட் பந்துகள் வந்தது. ஒரு கட்டத்தில் நான் அவுட்டாக முயற்சித்தேன். என்னால் அவுட்டாகவும் முடியவில்லை.

அந்தப் போட்டிக்கு பின்னர் என்னுடைய கேரியர் முடிந்து விட்டது என்று அனைவரும் நினைத்தார்கள். நான் கூட அதை தான் நினைத்தேன். ஆனால் இதுதான் வாழ்க்கை. வெற்றிகளையும் புகழையும் ஏற்றுக் கொள்ளும் நாம் தோல்விகளையும் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நாம் முன்னேறிச் செல்லவேண்டும் என்று யுவராஜ் சிங் தற்போது பேட்டியளித்துள்ளார்.