2016ல புவிக்கு பதிலா நான் பர்பிள் கோப்பையை வங்குனப்போ, நம்மாளும் ஒருநாள் வாங்கணும் வெறியோடு இருந்தேன் – உருக்கமாக பேசிய சிராஜ்!

0
347

6 லீக் போட்டிகளில் 12 விக்கெட் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசப்படுத்தி இருக்கிறார் முகமது சிராஜ். அதைப் பெற்றபிறகு உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து, விராட் கோலி மற்றும் பாப் டு பிளசிஸ் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 ரன்கள் அடித்தது. இதில் விராட் கோலி 59 ரன்களும், டு பிளசிஸ் 84 ரன்கள் அடித்திருந்தனர்.

- Advertisement -

175 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிராஜ் மற்றும் வணிந்து ஹசரங்கா இருவரின் அபாரமான பந்துவீச்சால் விக்கெட்டுகளை இழந்து திக்குமுக்காடியது. இதில் சிராஜ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இறுதியில் 18.2 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

5 போட்டிகளில் 8 விக்கெட் வீழ்த்தி இருந்த சிராஜ், இப்போட்டியில் நான்கு விக்கெடுகள் பெற்றதன் மூலம் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை பெற்றார். இது குறித்து உருக்கமாக பேசிய அவர்,

“2016 ஆம் ஆண்டு புவனேஸ்வர் குமார் பர்பில் தொப்பியை வென்றிருந்தார். அப்போது அவருக்கு பதிலாக நான் அதைப் பெற்றுக்கொண்டேன். அந்த தருணம் முதலே இதை நாம் கண்டிப்பாக ஒரு சீசனில் பெற வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன்.

- Advertisement -

அதன் பிறகு ஒவ்வொரு சீசனிலும் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு இப்போது இந்த நிலையில் பர்பிள் தொப்பியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை தொடர்ச்சியாக செய்து, சீசனின் கடைசியில் பர்பிள் கோப்பையையும் வெல்வேன் என நம்புகிறேன். அணிக்கு இதன் மூலம் பங்களிப்பை கொடுப்பதில் மகிழ்ச்சி.” என்றார்.

மேலும், தனது பந்துவீச்சு துல்லிய மற்றும் உடல்தகுதி பற்றி பேசிய அவர், “கொரோனா ஊரடங்கில் இதற்காக நான் தீவிரமாக உழைத்தேன். அதற்கு முன்பு என்னுடைய பந்துகளை பவுண்டரிகளாக அடித்து வந்தார்கள். இது என்னை மனதளவில் பாதித்துவிட்டது. அதை சரி செய்வதற்கு கொரோனா ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டேன். அப்போது கொடுத்த உழைப்பிற்கு இப்போது பலனை அறுவடை செய்து வருகிறேன்.” என்றும் பேட்டி அளித்தார்.