ரகானே ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் பொழுதே நான் அவரோட தீவிரமான ஃபேன் – பிராவோ நச் பேட்டி!

0
1950
Bravo

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மினி ஏலத்தில் கொல்கத்தா அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட இந்திய அணியின் அனுபவ வீரர் ரகானேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது!

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ரகானேவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பைக்கு எதிராக வான்கடேவில் நடந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி இருவரும் விளையாட முடியாத காரணத்தால், ரகானேவுக்கு மகேந்திர சிங் தோனி நம்பி வாய்ப்பு கொடுத்தார்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் ரகானேவின் பேட்டிங் வேறு ஒரு விதத்தில் இருந்தது. அதிரடியாக அரை சதம் விளாசிய அவர் மும்பை அணி நிர்ணயித்த இலக்கை சென்னை அணி எளிதாக எட்ட உதவி செய்து ஆட்டத்தை முடித்தார்.

இதற்கு அடுத்து தொடர்ந்து அதிரடியாக விளையாடி வரும் அவர் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் வெறும் 29 பந்தில் 71 ரன்கள் குவித்து மிரட்டினார்.

இதற்கு அடுத்து தற்பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரகானேவுக்கு இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர் பேட்டிங்கில் ஐபிஎல் தொடரில் தற்பொழுது சிறப்பாக செயல்பட்டு வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக அவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்திற்கும் அமைந்துள்ளது.

- Advertisement -

சென்னை அணியில் முக்கிய வீரராக இருந்து ஓய்வு பெற்று தற்பொழுது சென்னை அணையிலேயே பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பிராவோ ரகானேவின் புதிய பரிணாமம் குறித்து சிறப்பு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

ரகானே குறித்து பேசிய பிராவோ
“இந்தியாவின் சிறந்த உள்ளூர் வீரர்களில் ரகானேவும் ஒருவர். ஆரம்பத்தில் அவர் ராஜஸ்தான் அணிக்கு விளையாடும் பொழுதே நான் அவருக்கு தீவிர ரசிகன். எனவே அவர் எங்கள் அணியில் இடம் பிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆம் அவரது ஆட்டம் ஒரு மாறி உள்ளது. ஆனால் அதற்கான திறமை அவரிடமே இருந்தது.

சிஎஸ்கே அணி நிர்வாகம் யாரையும் சுதந்திரத்துடன் விளையாட அனுமதிக்கும். ஏனெனில் நாங்கள் உண்மையாக யார் மீதும் எந்த அழுத்தத்தையும் உருவாக்குவது கிடையாது. ரகானே இந்திய திறமைகளில் மிகச் சிறப்பானவர் என்று நிரூபித்து இருக்கிறார். மேலும் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி. அவர் எங்கள் அணியின் முக்கியமான வீரர். மேலும் அவர் சிஎஸ்கேவுக்கும் இந்திய அணிக்கும் நிறைய சிறப்பாக செயல்பட வேண்டும்!” என்று கூறியுள்ளார்!