“கிளாசன் என்ன சாப்பிடறாரோ அது எனக்கும் வேணும்.. மனுஷன் அடி பொளக்குறாரு!” – குயின்டன் டிகாக் ஆச்சரியமான பேச்சு!

0
402
Quinton

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று விளையாடியது ஐந்தாவது போட்டி. இந்த ஐந்து போட்டிகளில் நெதர்லாந்து அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்து, மற்ற நான்கு போட்டிகளையும் வென்று, தற்பொழுது புள்ளி பட்டியலில் எட்டு புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க அணி அதிரடியில் பங்களாதேஷ் பந்துவீச்சை நொறுக்கி தள்ளியது. முதல் இரண்டு விக்கெட்டுகளை வேகமாகப் பெற்ற பங்களாதேஷ் அணியால் அதற்கு மேல் எதுவுமே செய்ய முடியவில்லை.

தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் அதிரடியில் மிரட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் 140 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 174 ரன்கள் குவித்தார்.

இவருடன் சேர்ந்து கடைசி கட்டத்தில் விளையாடிய அதிரடி வீரர் ஹென்றி கிளாசன் 49 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் என 90 ரன்கள் நொறுக்கி தள்ளினார். இந்த ஜோடி 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அதிரடியாக அமைத்தது.

- Advertisement -

முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற குயிண்டன் டி காக் கூறும்பொழுது “நான் இந்த போட்டியில் திருப்தியாக இருந்ததை விட சற்று சோர்வாக உணர்ந்தேன். இன்று எங்கள் அனைவருக்கும் சிறப்பான நாள், அனைவரும் தங்களுடைய பங்கை சிறப்பாக ஆற்றினார்கள். புள்ளி பட்டியலில் இரண்டு புள்ளிகள் எடுக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

இந்த போட்டிக்கு முன்பாக காலையில் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. நான் இன்னும் கொஞ்சம் வேடிக்கையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தேன். இறுதியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் பெற்றதில் மகிழ்ச்சி.

கிளாசன் விளையாடும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் என்ன ஜூஸ் குடிக்கிறாரோ அது எனக்கும் தேவைப்படுகிறது. அவர் விளையாடிய எல்லா அணிக்குமே அவர் சிறப்பு வாய்ந்தவர். போட்டியை புயல் மாதிரி எடுத்துச் செல்கிறார்!” என்று பாராட்டி கூறியிருக்கிறார்!