ஹாலோ செலக்டர்ஸ், இந்த ரெண்டு தங்கத்தையும் இந்த வருஷமே உலககோப்பைக்கு எடுங்க! – சுரேஷ் ரெய்னா!

0
530

இவர்கள் இருவரையும் இந்த வருடம் உலக கோப்பைக்கே எடுத்து விடுங்கள் என்று பிசிசிஐ-க்கு அறிவுறுத்துயுள்ளார் சுரேஷ் ரெய்னா.

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டரை தூக்கி நிறுத்தும் அளவிற்கு அபாரமாக செயல்பட்டார் திலக் வர்மா. எட்டு போட்டிகளில் கிட்டத்தட்ட 240 ரன்கள் அடித்திருந்தார். அதன் பிறகு உடல்நிலையில் பிரச்சனை காரணமாக தற்போது வெளியில் இருக்கிறார்.

- Advertisement -

இந்த நேரத்தில் திலக் வர்மாவிற்கு பதிலாக உள்ளே வந்த நேகல் வதேரா அடுத்தடுத்து இரண்டு அரைசதங்கள் அடித்து அவரும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த வருடம் பட்லர் எதிர்பார்த்தவாறு செயல்படவில்லை. ஆனால் அவற்றை மறக்கடிக்கும் விதமாக யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஆடிவரும் ஆட்டம் அபாரமாக இருந்திருக்கிறது. ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் உட்பட 12 போட்டிகளில் 575 ரன்கள் குறித்து ஆரஞ்சு தொப்பிக்கு கடும் சவாலாக இருந்து வருகிறார். இவரது ஸ்ட்ரைக்கில் கிட்டத்தட்ட 175 ஆகும். இந்த அளவிற்கு அதிரடியாகவும் செயல்பட்டு வருகிறார்.

கொல்கத்தா அணிக்கு யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ரிங்கு சிங் மிகச்சிறப்பாக பினிஷிங் செய்து வருகிறார். கீழ் வரிசையில் களமிறங்கி 12 போட்டிகளில் 350 ரன்கள் விளாசியுள்ளார். அவை அனைத்தும் மிக முக்கியமான கட்டத்தில் வந்தவை. மூன்று போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக கடைசி ஓவரில் பினிஷிங் செய்து கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இப்படி இந்திய அணிக்கு விளையாடாத இளம் வீரர்கள் சிலர் இந்த வருட ஐபிஎல் சீசனில் மிகச்சிறப்பாக விளையாடி தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். இதனை குறிப்பிட்டு பேசிய சுரேஷ் ரெய்னா, விரைவில் இரண்டு வீரர்கள் இந்த வருட உலககோப்பையிலேயே விளையாட வேண்டும். அவர்களது பார்மை பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். சுரேஷ் ரெய்னா பேசியதாவது:

“ஜெய்ஸ்வால் தனது வாழ்வின் சிறந்த பார்மில் இருக்கிறார் மற்றும் ரிங்கு சிங் பினிஷிங் உலகத்தரம். இவர்கள் இருவரும் இந்த வருட ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் தங்களது பங்களிப்பை கொடுத்து அசாத்தியமாக விளையாடுகின்றனர்.

இந்த வருடம் உலககோப்பை இந்தியாவில் நடைபெறுவதால், இவர்களது பார்மை பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் இருவரையும் இந்த வருட உலகக்கோப்பையிலேயே பார்க்க விரும்புகிறேன். தேர்வு குழுவினருக்கு இதை நான் வேண்டுகோளாகவும் பரிந்துரையாகவும் வைக்கிறேன். குறிப்பிட்ட மைதானம் மட்டுமல்லாது, கிட்டத்தட்ட ஒவ்வொரு மைதானத்திலும் இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.” என்றார்.