உலககோப்பையில் பைனலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும்! கோப்பையை இந்த அணிதான் வெல்லும்! – மிஸ்பா உல் ஹக் கணிப்பு!

0
1374

“நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை பைனலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதவேண்டும்.” என்று விரும்புவதாக தனது கணிப்பில் கூறியுள்ளார் மிஸ்பா உல் ஹக்.

50-ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெற உள்ளது என்றும் கணிக்கப்பட்ட அட்டவணை கூறுகிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உலககோப்பையில் எந்தவித சிக்கலும் இன்றி பங்கேற்கும் என்கிற தகவல்களும் வந்திருக்கின்றன. பிசிசிஐ தரப்பிலிருந்து வெளிவந்த உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையில் பாகிஸ்தான் அணி மொத்தம் ஒன்பது லீக் போட்டிகளில் விளையாடுகின்றது.

கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் பெங்களூரு என ஐந்து மைதானங்களில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது என்கிற தகவல்களும் வருகின்றன.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் மீது பல்வேறு எதிர்பார்ப்புகளும் கருத்துக்களும் கணிப்புகளும் தொடர்ந்து இப்போது இருந்தே வந்த வண்ணம் இருக்கின்றன. பல முன்னாள் வீரர்கள் பேசிவரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

“ஒரு பாகிஸ்தானியராக, 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். எல்லா இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் இதையே விரும்புவார்கள், அதைவிட பெரிய விளையாட்டு கிரிக்கெட்டில் இருக்க முடியாது. அணிகளின் செயல்பாடு மற்றும் விதி இரண்டும் இறுதிப்போட்டியில் யார் யார் மோதுவர்கள் என்பதை தீர்மானிக்கும். ஆனால் என்னுடைய குறைந்தபட்ச எதிர்பார்ப்பை நான் இங்கே முன்வைக்கிறேன். அவ்வளவு தான்.” என்று அவர் கூறினார்.