“ஜோ ரூட் விளையாடற ஒரு ஷாட்டை நானும் விளையாட ஆசைப்படறேன்.. விளையாடுவேன்!” – விராட் கோலி வெளியிட்ட சுவாரசிய விஷயம்!

0
201
Virat

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு நடப்பு உலகக் கோப்பை தொடர் சிறப்பான ஒன்றாக அமையவில்லை.அதே சமயத்தில் சராசரியாகவும் அமையவில்லை. சராசரிக்கும் கீழாக சென்று இருக்கிறது. அவர்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அரையிறுதி வாய்ப்பைத் தவற விட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று இந்தத் தொடரில் வலிமையாக இருக்கும் இந்திய அணிக்கு எதிராக லக்னோ மைதானத்தில் அவர்கள் விளையாட இருப்பது புதிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு உண்டாக்கி இருக்கிறது.

- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணியை அறிவிக்கும் பொழுது, அவர்கள் விளையாடும் அணியில் 11 பேரும் பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள், இவர்களை எப்படி வெல்வது என்று ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

மேலும் டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல ஆட கூடியவர்கள். அப்பொழுது ஒருநாள் போட்டியை எப்படி விளையாடுவார்கள்? இந்த முறை ஒருநாள் கிரிக்கெட்டில் 500 ரன்கள் எட்டிய முதல் அணியாக மாறுவார்களா? என்று அவர்களது அதிரடி ஆட்டம் முறையின் மேல் சுவாரசியம் கூடியிருந்தது.

இந்த நிலையில்தான் அவர்களால் துவக்க பார்ட்னர்ஷிப் கூட கொண்டு வர முடியாமல், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக படுதோல்விகளைச் சந்தித்தார்கள். இந்த உலகக்கோப்பையின் எதிர்கால நினைவாக இங்கிலாந்துதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் பற்றி பேசி உள்ள விராட் கோலி கூறும் பொழுது ” மார்க் வுட்டுக்கு எதிராக நான் விளையாடியிருக்கிறேன். அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்யும் திறமை இருக்கிறது. எனவே அவருடைய உண்மையான வேகத்திற்கு எதிராக என்னை சோதிக்க விரும்புகிறேன்.

ஆதில் ரஷீத் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட வீரர். அவர் இங்கிலாந்துக்காக மிகவும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். சவாலான பந்துவீச்சாளரான அவருக்கு எதிராக விளையாட நான் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

ஜோ ரூட் ஒட்டுமொத்தமாக சிறந்தவர். அவர் ரிவர்ஸ் ஸ்லாப் விளையாடும் விதம் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. நான் அவர் விளையாடும் அந்த ஷாட்டை விளையாட விரும்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!