“அவரை டீமில் ஆட வைக்க ஆசையாக இருக்கு” – வெற்றி பெற்றாலும் சிஎஸ்கே வீரருக்காக பேசிய தல தோனி!

0
3889

உலக கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2023 ஆம் ஆண்டிற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . கடந்த மார்ச் 31ஆம் தேதி துவங்கிய இந்தத் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது . ஒவ்வொரு அணிக்கும் இரண்டு முதல் மூன்று போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகின்றன .

தற்போதைய நிலவரப்படி புள்ளிகள் பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் இருக்கிறது . மும்பை மற்றும் லக்னாவாணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் இருக்கின்றன . இந்தத் தொடரின் துவக்கத்தில் இருந்து சிறப்பாக ஆடி வந்த ராஜஸ்தான் அணி கடந்த சில போட்டிகளாக தடுமாற்றத்தை சந்தித்திருக்கிறது .

- Advertisement -

இன்று அந்த அணி கொல்கத்தா அணியுடன் மோத இருக்கிறது . இரண்டு அணிகளுக்குமே பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பை பலப்படுத்தும் போட்டியாக இது அமையும் என்பதில் சந்தேகம் இல்லை . நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டது . இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறலாம் .

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 167 ரன்களை எடுத்தது . இரண்டாவதாக ஆடிய டெல்லி அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது . இதன் மூலம் கிட்டத்தட்ட அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது என்றே கூறலாம் .

நேற்றைய போட்டியில் சென்னை அணியின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தது . குறிப்பாக கேப்டன் எம் எஸ் தோனி பந்துவீச்சாளர்களை கையாண்ட விதம் மற்றும் அணியின் பில்டிங் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது . நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை அணி சகல துறைகளிலும் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது .

- Advertisement -

பஞ்சாப் அணியுடன் சேப்பாக்கம் மைதானத்தில் தோற்ற பிறகு மும்பை மற்றும் டெல்லி அணிகளை சேப்பாக்கத்திலேயே வீழ்த்தி இருக்கிறது சென்னை . இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணமாக அமைந்தது. நேற்றைய போட்டியில் தோனி மீண்டும் இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் .

நேற்றைய போட்டிக்கு பின் பேசிய தோனி ” அணி வீரர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார் . முதல் இரண்டு இடங்களை பிடிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் . மீதி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களுக்குள் லீக் போட்டிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்தார் . மேலும் தொடர்ந்து பேசிய அவர் நியூசிலாந்து அணியின் மிச்சல் சான்ட்நரை அணியில் ஆட வைக்க ஆசையாக இருப்பதாக கூறினார் . தொடரின் துவக்க போட்டிகளில் பங்கு பெற்ற அவர் மகேஷ் தீக்க்ஷனா வருகையால் அணியில் இடம் கிடைக்காமல் மாற்று வீரராக வெளியில் இருக்கிறார் . இந்தத் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தார் இதுகுறித்து பேசியிருக்கும் தோனி அவரை ஆட வைக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .