ஆசியா கப்ல கிரிக்கெட் இல்லாம விராட் சார்கிட்ட நான் ஒரு விஷயம் தெரிஞ்சுக்கனும் – நேபாள் விக்கெட் கீப்பர் பேட்டி!

0
418
Virat

இந்த முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான உரிமை பாகிஸ்தான் நாட்டிடம் இருந்தது. இந்திய அணி அங்கு சென்று விளையாட முடியாது என்று கூறிவிட்ட காரணத்தினால், தற்பொழுது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடத்தப்படுகிறது.

இந்த வருடம் நடத்தப்பட இருக்கும் ஆசியக் கோப்பை தொடர் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தத் தொடரில் மொத்தம் ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நேபாள் ஒரு குழுவாகவும், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒவ்வொரு குழுவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் தங்கள் குழுவில் உள்ள மற்றொரு அணியுடன் ஒரு முறை மோதும். முதல் சுற்றில் இரண்டு போட்டிகள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டு குழுவில் இருந்தும் அடுத்த சுற்றுக்கு நான்கு அணிகளாக முன்னேறும். அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளைக் கொண்டு இறுதிப்போட்டி நடத்தப்படும்.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி தொடரின் முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி நேபாள் அணியுடன் மோதுகிறது. இந்திய அணி செப்டம்பர் இரண்டாம் தேதி பாகிஸ்தான் அணியுடனும் செப்டம்பர் நான்காம் தேதி நேபாள் அணியுடனும் விளையாட இருக்கிறது. இதற்கு அடுத்து இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெறும்.

இந்த நிலையில் இந்த ஆசியக் கோப்பைக்கு வந்துள்ள நேபாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் அர்ஜூன் சவுத் விராட் கோலியின் தீவிர ரசிகர் ஆவார். அவர் விராட் கோலி இடம் கிரிக்கெட் தவிர்த்து மேலும் ஒரு விஷயத்தாலும் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இது சம்பந்தமாக அவர் கூறும் பொழுது
“நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். அவர் உலகிலேயே சிறந்தவராக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர் தனது தாயை எவ்வளவு நேசிக்கிறார் மற்றும் ஒரு குடும்ப மனிதராக எல்லோரையும் எப்படிக் கவனித்துக் கொள்கிறார் என்பதையும் நாங்கள் பார்த்து வருகிறோம்.

அவர் களத்திற்கு வெளியே தன்னை எப்படிக் கொண்டு செல்கிறார் என்பதைத்தான் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அவருடைய குடும்பத்திற்காக அவர் பல தியாகங்களை செய்திருக்க வேண்டும். மேலும் அவர் எல்லோரையும் எப்படி கவனித்துக் கொள்கிறார் என்பதையும் நான் தெரிந்து கொள்ள வேண்டும்.

நேபாளத்திற்காக விளையாடுவது பெருமையான விஷயம். எங்கள் குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய மிகப்பெரிய அணிகள் இருக்கின்றன. இன்சமாம் பாய், வக்கார் யூனுஸ் பாய் மற்றும் கபில் சார் எங்களுக்கெல்லாம் ஒரு உத்வேகமாக நாங்கள் பார்த்து இருக்கிறார்கள். இந்த இரண்டு பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடுவது எங்கள் வாழ்நாளில் ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!