“10 ஓவர் மிச்சம் வச்சு ஜெயிக்க நினைச்சேன்.. ஆனா ஒரு விஷயம் ஏமாத்திடுச்சு!” – டேரில் மிட்சல் வருத்தமான பேச்சு!

0
8233
Mitchell

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நேற்று இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 397 ரன்கள் குவித்த போதிலும், தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியின் 41வது ஓவர்கள் வரையில் இந்திய அணிக்கு பெரிய அச்சத்தைக் கொடுத்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய டேரில் மிட்சல் 119 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தார்.

நடப்பு உலகக் கோப்பை லீக் சுற்றில் தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து போட்டியிலும் இவர் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று போட்டியில் தோற்றது குறித்து பேசி உள்ள அவர் சில முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

நேற்றைய போட்டி பற்றி பேசி உள்ள அவர் கூறும் பொழுது “இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறதோ, அதை எங்களிடமும் செய்தது இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது. நாங்கள் அவர்களை எதிர்த்து விளையாடுவதற்கான திட்டங்களை வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டார்கள்.

- Advertisement -

நேற்று இலக்கை தொட முடியாததில் ஏமாற்றம் அடைகிறோம். நேற்று நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பனி வரும் என்று நினைத்தேன். பாதி ஆட்டத்தில் இருக்கும் பொழுது 10 ஓவர்கள் மீதம் வைத்து ஜெயிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால் இந்த நேரத்தில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கான பெருமையை கொடுக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

இந்திய அணியின் எல்லா வேகப்பந்து வீச்சாளர்களும் நேற்று அருமையாக பந்து வீசினார்கள். முதல் 10 ஓவர்களில் ஸ்விங் ஆகி கொண்டு இருந்தது. அதையும் அவர்கள் சிறப்பாக செய்தார்கள். அவர்கள் உலகத்தரமான பந்துவீச்சாளர்கள்.

நேற்று தோல்வி அடைந்த நேரத்தில் தசைப்பிடிப்பை விட, அதற்கு மிக முக்கியமான காரணங்கள் இருந்தது. அந்த விஷயங்கள்தான் எங்களை வெற்றியை தொட முடியாமல் செய்தது. அவ்வளவு பெரிய இலக்கை துரத்தும் பொழுது உங்களுக்கு சில விஷயங்கள் உங்கள் வழியில் நான் போக வேண்டும். எங்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை!” என்று கூறி இருக்கிறார்!