“சத்தியமா சொல்றேன் இதை விராட் கோலி செய்யாம விடவே மாட்டார்” – பாகிஸ்தான் வக்கார் யூனுஸ் சவால்!

0
9891
Virat

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கிரிக்கெட்டுக்கான தூதுவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் மூலமாக கிரிக்கெட் வெகுஜன மக்களை மிக வேகமாகச் சென்றடைந்து தன்னை தற்காத்துக் கொண்டே இருக்கும்!

70 பிற்பகுதி மற்றும் 80களில் உலக கிரிக்கெட்டின் தூதுவராக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ் இருந்தார். சர்வதேச கிரிக்கெட் தாண்டி, அவர் இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற கவுண்டி போட்டிகளில், தனது அதிரடி பேட்டிங்கால் பல மாயாஜாலங்களை செய்து, ஒரு கதாநாயகனாக வலம் வந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து 90களின் பிற்பகுதியில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்கம் ஆரம்பித்தது. ஏறக்குறைய 2000 தாண்டி, அவர் ஓய்வு பெறும் வரையிலும், உலக கிரிக்கெட்டின் தூதுவராக முன் நின்று அவரே வலம் வந்தார்.

பின்பு அவர் விட்ட இடத்தில் இருந்து புகழில் மகேந்திர சிங் தோனி தொடர்ந்தாலும், உலக கிரிக்கெட்டின் தூதுவராக பயணப்பட முடிந்தது விராட் கோலியால்தான். அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிவிக்கப்படாத தூதுவராகவே இருந்தார்.

மிக முக்கியமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான அணுகுமுறையை கொண்டிருந்தார். போட்டி மற்றும் ஆடுகளம் எந்த விதத்தில் இருந்தாலும் முடிவு தெரிகின்ற வகையில் விளையாட வேண்டும் என்பது அவரது அணியின் மந்திரமாக அவர் மாற்றி இருந்தார். இதன் காரணமாக அவர் உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிவிக்கப்படாத தூதுவராக இருந்தார்.

- Advertisement -

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இப்படி இருந்தாலும் கூட, அவரது மிகச் சிறப்பான செயல்பாடுகள் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில்தான் மிக அதிகம் இருக்கிறது. அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தின் அரசனாகவே இருந்து வருகிறார்.

உலக கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது ஒருநாள் கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ளும் பொழுது 49 சதங்கள் அடித்திருந்தார். ஆனால் விராட் கோலி தற்போது 47 சதங்கள் அடித்து இருக்கிறார். கடைசியாக ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 122 ரன்கள் குவித்தார். தன்னுடைய ஓய்வின்போது அவர் சச்சினின் இந்த சதச் சாதனையை நிச்சயம் முறியடிப்பார் என்பதில் சந்தேகம் கிடையாது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ் கூறும்பொழுது “விராட் கோலி தனக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம் என்னவென்று காட்டுகிறார். அவர் சச்சினை விட வித்தியாசமாக இருக்கிறார். சச்சின் தன் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கும் பொழுது 49 சதங்கள் அடித்து இருந்தார்.

நான் சத்தியம் செய்து சொல்கிறேன் விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் முடிவின்போது இன்னும் நிறைய நிறைய சதங்கள் அடித்து, அவர் எல்லா சாதனைகளையும் முறியடித்து ஓய்வு பெறுவார்!” என்று கூறியிருக்கிறார்!