“நானே சொல்றேன்.. ஷாகின் அப்ரிடி பும்ராவ பார்த்து கத்துக்கனும்!” – வக்கார் யூனிஸ் வெளிப்படையான கருத்து!

0
3154
Shaheen

பாகிஸ்தான் அணி எப்பொழுதும் பேட்டிங்கை விட பந்துவீச்சில் வலிமையான ஒரு அணி. மிகக்குறிப்பாக வேகப்பந்து வீச்சில் பாகிஸ்தான் எப்பொழுதும் வலிமையான அணியாகவே இருக்கும்!

பாகிஸ்தான் அணிக்குள் வருகின்ற ஒரு அறிமுக வேகப்பந்துவீச்சாளர் கூட அச்சுறுத்தல் தரக்கூடியவராகவே இருப்பார். அவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களை தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை போல இருக்கக்கூடியவர்கள்.

- Advertisement -

இப்படியான பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தில் தற்பொழுது ஷாகின், ஹாரிஸ், நசீம் என மிகச்சிறந்த வேகப்பந்து வச்சு கூட்டணி பாகிஸ்தானுக்கு கிடைத்திருந்தது. இந்த கூட்டணி பாகிஸ்தானுக்கு வெற்றிகளை பெற்றுத் தந்து இருக்கிறது.

ஆனால் தற்பொழுது நசீம் ஷா காயத்தால் உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை. ஹாரிஸ் வேகமாக மட்டும் வீசுகிறார் அவரை மிக எளிதாக விளையாடி விடுகிறார்கள். மேலும் ஷாகின் இடம் பழைய துல்லியம் இல்லை. அவரால் போட்டியில் எங்கும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஷாகின் மற்றும் ஹாரிஸ் இருவரையும் ரோகித் சர்மா மிக எளிதாகக் கையாண்டார். மிகக்குறிப்பாக ஹாரிஸ் பந்துவீச்சில் ஒரு போட்டியில் மூன்று சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்று மாறினார். அந்த அளவிற்கு தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

தற்பொழுது ஷாகின் அப்ரிடி பந்துவீச்சு பற்றி பேசி உள்ள பாகிஸ்தான் லெஜெண்ட் வக்கார் யூனிஸ் “அவரது உடல் தகுதியில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் பந்துவீச்சு ஒழுக்கம் இல்லை. மேலும் விக்கெட்டை எடுப்பதற்காக முயற்சி செய்து வருகிறார். ஷாகின் யார்க்கர் பெறுவதற்காக பந்தை பயிற்சி செய்து கொண்டே இருக்கும் பொழுது, அது பேட்ஸ்மேன்களுக்கு மிக எளிதாகத் தெரிந்து விடும்.

பும்ராவை எடுத்துக் கொண்டால் அவர் முதலில் அழுத்தத்தை உருவாக்குகிறார். அவரது லைன் ஆப் ஸ்டெம்புக்கு மேல் இருக்கிறது. அவர் பாகிஸ்தானுக்கு எதிராக அழுத்தத்தை உருவாக்கித்தான் விக்கெட்டை கைப்பற்றினார்.

நசீம் ஒரு நல்ல பந்துவீச்சாளர் அவர் ரன்களை விட்டுத்தர மாட்டார். அவர் பேட்ஸ்மேன்களுக்கு ரன் அழுத்தத்தை தரும்பொழுது, மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை பெறுவதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். இது ஒரு பந்துவீச்சாளர் இல்லாமல் போனதால்தான் இப்படி என்று கிடையாது, இவர்கள் பந்துவீச்சை எளிமையாக வைக்காததால் இது தொடர்கிறது!” என்று கூறியிருக்கிறார்!