“கில் இடம் பேசினேன்.. என் கதையை சொல்லி பலப்படுத்தி இருக்கேன்..!” – யுவராஜ் சிங் தந்த சூப்பர் அப்டேட்!

0
1383
Gill

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளை மறுநாள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

தற்பொழுது இந்தியா பாகிஸ்தான் இரண்டு அணிகளும் குஜராத் அகமதாபாத் மைதானத்திற்கு சென்று உள்ளன. மேற்கொண்டு நாளை முதல் இரண்டு அணிகளும் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெரிய வருகிறது.

- Advertisement -

மேலும் இந்தியா தனது முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை அபாரமாக வென்றும், பாகிஸ்தான அணி நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை அபாரமாக வென்றும் நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றன.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள இளம் வீரர் சுப்மன் கில் நேற்று அகமதாபாத் போய் சேர்ந்தார். மேலும் மகிழ்ச்சியான செய்தியாக அவர் இன்று ஒரு மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்திருக்கிறார். நாளை தொடர்ந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்திய அணி நிர்வாகம் இல்லை எப்படியாவது பாகிஸ்தான் போட்டிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறது. குஜராத் அகமதாபாத் மைதானம் அவருக்கு மிகவும் ராசியான ஒரு மைதானமாகவும் ஐபிஎல் தொடரில் சொந்த மைதானமாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

தற்பொழுது கில் குறித்து பேசி உள்ள யுவராஜ் சிங் கூறும் பொழுது “நான் அவரை பலப்படுத்தி இருக்கிறேன். நான் உலகக் கோப்பைக்கு புற்றுநோயிலிருந்து எவ்வாறு தயாராகி வேகமாக வந்து விளையாடினேன் என்பது குறித்து கூறி இருக்கிறேன். அவர் பாகிஸ்தான் போட்டிக்கு தயாராக இருப்பார் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு டெங்கு போன்ற ஒரு காய்ச்சல் இருக்கும் பொழுது நீங்கள் வந்து ஒரு முழுப் போட்டி விளையாடுவது கடினமானது. நான் இதை அனுபவித்து இருக்கிறேன். அவர் உடல் நலத்துடன் இருந்தால் கண்டிப்பாக விளையாடுவார்.

இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே இந்தியாவில் போட்டி நடைபெறுவது நல்லது. அகமதாபாத் மைதானம் நிரம்பும் அளவுக்கு ரசிகர்கள் திரண்டு வருவார்கள். இது மீண்டும் பெரும்பாலும் அமையாத ஒன்று. அனுபவிக்க வேண்டிய ஒன்று. இதற்குப் பிறகு பல போட்டிகள் இருக்கின்றன அதுவும் நன்றாக அமையும்.

இரண்டு அணிகளுமே கடைசி இரண்டு போட்டிகளில் வென்று நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றன. பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் நன்றாக இருக்கிறார். குறிப்பாக இலங்கைக்கு எதிராக அவர்கள் உலக சாதனை ரன்னை சேஸ் செய்ததால் நல்ல நம்பிக்கையில் இருப்பார்கள்!” என்று கூறி இருக்கிறார்.