“சத்தியம் பண்றேன்.. என் மருமகன் கேப்டனாக உள்குத்து பண்ணல!” – ஷாகித் அப்ரிடி ஆவேசம்!

0
358
Shahid

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் கேப்டன் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது, அந்த நாட்டில் மிகப்பெரிய விமர்சனங்களை உருவாக்கியது.

முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள். வீரர்கள் நாடு திரும்புவதற்கு முன்பாகவே கொந்தளிப்பான நிலைமைகள் காணப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் உடல் தகுதியில் கொஞ்சமும் அக்கறை காட்டுவதில்லை, அவர்களிடம் எந்த உணவு கட்டுப்பாடும் கிடையாது என்று பாகிஸ்தான் லெஜெண்ட் வாசிம் அக்ரம் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். மேலும் சரியான ஆலோசனைகளை அவர்கள் விரும்புவதில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலைமையில் உலகக்கோப்பையில் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணி நாடு திரும்பியதும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தானின் மூன்று வடிவ கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டார்.

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு முகமது ஹபிஸ், தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வஹாப் ரியாஸ் ஆகியோர் கொண்டுவரப்பட்டார்கள்.

- Advertisement -

இத்தோடு பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் மருமகன் ஷாஹீன் அப்ரிடி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தற்பொழுது பாகிஸ்தான அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த நிலையில் தன் மருமகன் கேப்டனாக தான் காரணமா? என்பது குறித்து பேசிய ஷாஹித் அப்ரிடி “நான் சத்தியம் செய்து சொல்கிறேன். ஷாகின் அப்ரிடி கேப்டன் ஆவது குறித்து நான் எப்பொழுதும் பேசியது கிடையாது. நான் ஒருபோதும் லாபி செய்ததில்லை. நான் இந்த மாதிரியான விஷயத்தில் ஈடுபடுவதில்லை. எனக்கு அது தேவையுமில்லை பிடிக்கவும் இல்லை!” என்று கூறி இருக்கிறார்!