“நான் இந்த பையனுக்காக இந்தியா விளையாடும் போட்டிகளை பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன்!” – ரசல் வியப்பான பேச்சு!

0
9675
Russell

இந்திய கிரிக்கெட்டில் தற்போது நிறைய இளம் கிரிக்கெட் திறமைகள் உருவாகி வந்து கொண்டிருக்கின்றன. மேலும் அவர்களை அடையாளம் காண்பதற்கு ஐபிஎல் தொடர் மிகவும் உதவியாக இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருந்து வருகிறது.

ஐபிஎல் தொடரால் ஏற்படும் சில பாதிப்புகள் இருந்த போதிலும் கூட, இளம் திறமைகளை கண்டறிவதற்கு ஐபிஎல் தொடர் பயன்படும் விதத்தின் காரணமாக, இந்தியாவில் ஐபிஎல் தொடர் அத்தியாவசியமான ஒன்றாக மாறுகிறது.

- Advertisement -

தற்பொழுது இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கும் இளம் வீரர்கள் அனைவரையும் எடுத்துக் கொண்டால் உள்நாட்டில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் கூட, ஐபிஎல் தொடரில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்பு, சர்வதேச பெரிய வீரர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதுதான் இந்திய அணிக்கு தேர்வாக முக்கிய காரணமாக இருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் டிவால்ட் பிரிவியஸ் போன்ற சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் விளையாடிய இளம் வீரர்களுக்கும், அவர்கள் தங்கள் நாட்டின் தேசிய அணிகள் இடம்பெறுவதற்கு ஐபிஎல் மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. இந்த வகையில் இந்தியாவின் ரிங்கு சிங் மிகவும் முக்கியமானவர். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரசல் கூறும்பொழுது “நான் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்மோதிக் கொண்டிருக்கும் டி20 தொடரை பார்த்து வருகிறேன். ஒருவேளை தவறவிட்டால் கூட ஹைலைட்ஸ் பார்க்கிறேன். காரணம் ரிங்கு சிங் மட்டும்தான்.

- Advertisement -

ரிங்கு என்ன செய்கிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர் சில வருடங்களுக்கு முன்பு கொல்கத்தா அணியில் சேர்ந்தார். அவர் பயிற்சி ஆட்டங்களிலும் வலைகளிலும் விளையாடும் பொழுது அவரது திறமையை நாங்கள் பார்த்தோம். அவர் பெரிய ஷாட்களை அடிப்பார்.

ஆனால் அவர் உள்நாட்டிலும் ஐபிஎல் தொடரிலும் என்ன செய்தாரோ, அதை மிகப்பெரிய மேடையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் செய்வது என்பது மிகச் சிறப்பான விஷயம். எந்த வீரரும் ஆட்டத்தை முடிக்க விரும்பும் விதத்தில் அவர் முடித்துக் கொண்டு இருப்பது மிகவும் அருமை. அவர் சிறந்த டீம் மேன். எதிர்காலத்தில் இன்னும் சிறந்த உயரத்திற்கு செல்வார்.

ரிங்கு சிங் போன்ற ஒருவர் போட்டிக்குள் வந்து ஆட்டத்தை முடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த ஐபிஎல் ஆண்டு குறித்து இது எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. ரிங்கு சிங் இருப்பதால் நான் என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாட முடியும்!” என்று கூறியிருக்கிறார்!