“இத நான் செஞ்சிருக்க கூடாது.. இந்த முடிவுதான் எங்க தோல்விக்கு காரணம்!” – இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் வேதனையான பேச்சு!

0
2140
Buttler

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட மிக முக்கியமான போட்டி நடைபெற்றது.

இங்கிலாந்து அணி இதற்கு முன்பு விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வென்று இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா தன்னுடைய முதல் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்று ஒரு போட்டியில் மட்டும் நெதர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது.

இந்த நிலையில் இன்று தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்துவது இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்கும் என்கின்ற நிலைமை இருந்தது. இதன் காரணமாக இந்த போட்டிக்கு முக்கியத்துவமும் அதிகரித்து இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தார். அது மிகப்பெரிய தவறாக அமைந்துவிட்டது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. ஹென்றி கிளாசன் 109 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் 170 ரன்கள் மட்டும் எடுத்து 229 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறும்பொழுது “இது நம்ப முடியாத ஏமாற்றம். நன்றாக விளையாடுவோம் என்று நம்பிக்கை உடன் வந்தாலும் எங்களுக்கு அடிப்பட்டது. முதல் இன்னிங்ஸ் முழுவதும் நாங்கள் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை.

நடுவில் டாப்லி காயம் அடைந்தார். அது கடினமான 50 ஓவர்கள் ஆக அமைந்தது. அவர்களை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்தேன். எல்லோரும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

நம்ப முடியாத கடினமான சூழ்நிலையில் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது பெரிய தவறு. ஈரப்பதத்தின் காரணமாக தசைப்பிடிப்புகள் என்று எல்லோருக்கும் மிக கடினமாக இருந்தது. நாங்கள் பேட் மூலம் ஒரு நல்ல தொடக்கத்தை பெற வேண்டும். தோல்வி என்கின்ற பொழுது அங்கு எந்த பிழைகளுக்கும் இடமில்லாமல் போய்விடுகிறது!” என்று கூறியிருக்கிறார்!