“நான் சொல்றேன் பும்ரா விளையாட கூடாது!” – இலங்கை லெஜென்ட் சமிந்தா வாஸ் பரபரப்பு பேச்சு!

0
20507
Vaas

தற்பொழுது இந்திய அணி ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. அடுத்து உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு அக்டோபர் 5ல் துவங்கும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முழுமையாக பங்கேற்று விளையாடும்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணிக்கு தொடர்ச்சியாக போட்டிகள் இருக்கின்றன. தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு இந்திய அணியும் தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது.

ஆசியக்கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக பெற்ற வெற்றிகளால் இந்திய அணி நம்பிக்கையுடன் காணப்படுகிறது. வாய்ப்பு பெற்ற அனைத்து வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு காயம் ஒரு பிரச்சினையாக இருந்தது. மத்திய வீரர்கள் பலரும் காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறார்கள். எனவே வீரர்கள் குறித்து காயம் பற்றிய கவலை மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது காயத்தில் இருந்து திரும்பி இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா குறித்து பேசி உள்ள இலங்கை லெஜெண்ட் சமிந்தா வாஸ் கூறுகையில் “பும்ரா போன்ற வீரர்கள் ஒரு தனித்துவமான பவுலிங் ஆக்ஷனை வைத்திருக்கிறார்கள். மேலும் தனித்துவமான திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய திறமை பெற்றவர்களை பாதுகாப்பது நம்முடைய பொறுப்பு.

இப்படியானவர்களால் எல்லா வடிவங்களிலும் விளையாட முடியாது. அவர்களுக்கு சரியான கிரிக்கெட் வடிவத்தை கண்டறிந்து, அதற்கேற்ப அவர்கள் விளையாடுவதை பணி நிர்வாகம் நிர்வகிக்க வேண்டும். எல்லா வடிவங்களிலும் அவர்களை விளையாட வைக்க கூடாது.

விராட் கோலி சிறப்பானவர் என்பதை நாம் அறிவோம். கடந்த 10 ஆண்டுகளில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். ரோகித் சர்மாவும் சிறப்பான வீரர். இந்திய அணிக்காக அவர்கள் 100 சதவீதத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். இவர்களது விளையாட்டைக் காண ஆவலாவை காத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்!