“ஆசிய கோப்பை முழுசா பார்த்தேன்.. பாபருக்கு சொந்த டீம்ல இது நடந்துட்டு இருக்கு!” – மொயின் கான் அம்பலப்படுத்திய முக்கிய விஷயம்!

0
3587
Babar

தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்திருக்கிறது. இந்தியாவில் நடக்க இருக்கும் உலக கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்பிருக்கின்ற அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, கிட்டத்தட்ட பத்து நாட்களில் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது!

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் மிகவும் பலமிக்க அணியாக வருகை தந்தது பாகிஸ்தான் அணிதான். அப்படித்தான் பாகிஸ்தான் அணியை பற்றி பல கிரிக்கெட் வல்லுனர்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள்.

- Advertisement -

கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்துகளுக்கு ஏற்றவாறு இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் முதல் நான்கு விக்கெட்டுகளை மிக அனாயசமாக வீழ்த்தி சரித்தார்கள்.

இதற்கடுத்து பாகிஸ்தானில் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் முதல் போட்டியில் 40 ஓவர்களில் இலக்கை எட்டி பங்களாதேஷை வீழ்த்தி, கம்பீரமாக அடுத்த இரண்டு போட்டிகளை எதிர்கொள்ள காத்திருந்தார்கள். ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணியைப் பார்க்க சிறப்பாக இருந்தது.

இதற்கு அடுத்து இரண்டாவது சுற்றில் இந்திய அணி உடன் மோதியபொழுதுதான் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் வந்தது. இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடம் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் தோற்றுப் போனார்கள். இந்திய பந்துவீச்சாளர்களிடம் ஒட்டுமொத்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களும் தோற்றுப் போனார்கள். 228 ரன்கள்வித்தியாசம் என்கின்ற வரலாற்று தோல்வியை பாகிஸ்தான் சந்தித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பாகிஸ்தான் இலங்கை அணியை வென்றுவிடும் என, இந்தியாவுடன் ஆன தோல்வியை மறக்க பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பி காத்திருந்தார்கள். ஆனால் இலங்கை அணிக்கு எதிராகவும் பாகிஸ்தான அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேற, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் அல்லாது, பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கான் ஒரு முக்கிய விஷயம் பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறும் பொழுது “நான் மொத்தத் தொடரிலும் ஒன்றைக் கவனித்தேன். அதைப் பற்றி நான் பேசவும் செய்திருந்தேன். களத்தில் எந்த வீரரும் பாபரை நோக்கி நடக்கவில்லை. ரிஸ்வான் கூட அவரிடம் வரவில்லை. மேலும் துணை கேப்டன் சதாப் கான் கூட அவரிடம் வரவில்லை.யாருமே அவரிடம் செல்லவில்லை. அதைப் பார்த்த போது எல்லோரும் சிதறிவிட்டதாக நான் உணர்ந்தேன். நிச்சயமாக பாகிஸ்தான் அணிக்கு ஒற்றுமை இல்லை!” என்று கூறியிருக்கிறார்!