“பணத்துக்காகத்தான் நான் ODI கிரிக்கெட்ல ரிட்டையர்டு ஆகிறேன்!” – உண்மையை ஒத்துக் கொண்ட குயின்டன் டிகாக்!

0
1303
Quinton

கிரிக்கெட் உலகில் 2000ஆம் ஆண்டுகளைத் தாண்டி நிறைய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் வர ஆரம்பித்தார்கள். மகேந்திர சிங் தோனி சங்கக்கரா ஆகியோர் அதில் மிக முக்கியமானவர்கள்.

இதற்கு அடுத்து ஒரு கட்டத்தில் விக்கெட் கீப்பர் என்பவர்கள் கட்டாயம் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்கின்ற ஒரு சூழ்நிலையே உருவாககி விட்டது. ஆரம்ப காலகட்டங்களில் அப்படி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்த நிலையில் விக்கெட் கீப்பிங் உலகச் சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், பந்து தாக்கி காயம் அடைந்து கிரிக்கெட்டை விட்டு எதிர்பாராத விதமாக வெளியேற, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனுக்கு ஒரு பெரிய வெற்றிடம் உருவானது.

அந்த இடத்தை நிரப்புவதற்கு கடைசியாக அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸை வைத்துக் கூட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் முயற்சி செய்து பார்த்தது. ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக, கேப்டனாக இருந்து அவரால் விக்கெட் கீப்பிங் பணியையும் சேர்ந்து செய்ய முடியவில்லை.

இந்த நிலையில்தான் அப்போது இளம் வீரராக இடது கை பேட்டிங் செய்யக்கூடிய விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் வந்தார். ஏதோ அணிக்கு பேட்டிங்கில் பங்களிப்பு செய்யக்கூடியவராக இல்லாமல், துவக்க வீரராக வந்து அதிரடியில் மிரட்ட கூடியவராக இருந்தார்.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில், அவர் தொடர்ந்து மூன்று சதங்களை விளாசி ஆச்சரியப்படுத்தினார். அவரிடமிருந்து கிடைக்கும் அதிரடியான துவக்கம், பின்பு வரும் ஏபி டிவில்லியர்ஸ் வந்தவுடன் அதிரடியாக விளையாடுவதற்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது.

ஆரம்பத்தில் பெங்களூர் மற்றும் மும்பை என ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளுக்கும் 2.80 கோடிக்கு விளையாடி வந்த இவர், இந்த வருடம் மிக அதிகபட்சமாக 6.75 கோடிக்கு லக்னோ அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் சொந்த நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது, அடுத்து நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். 30 வயதான அவரின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

தற்பொழுது இதற்கான காரணத்தை மிக நேர்மையாக மனம் திறந்து பேசி உள்ள குண்டன் டி காக் ” டி20 கிரிக்கெட்டில் நிறைய பணம் கிடைக்கிறது என்பது உண்மை. இதை நான் மறுக்கப் போவது கிடையாது. நான் என்னுடைய கேரியரின் முடிவில் இருக்கிறேன். எல்லா தோழர்களுமே தங்களுடைய கிரிக்கெட் பெயரின் முடிவில், நல்ல சம்பாத்தியத்தை பெற விரும்புகிறார்கள். எந்த ஒரு சாதாரண நபரும் அதைத்தான் செய்வார். நானும் அதற்காகத்தான் செய்திருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!