“தோனி சொன்னதற்காக நான் கேப்டன் பதவியை உதறினேன்” – சுரேஷ் ரெய்னா வெளியிட்ட பரபரப்பான தகவல்!

0
1687
Raina

இன்று பிரான்சிசைஸ் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 அணியாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த அணிக்காக 2008 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை துணை கேப்டனாக இருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் சுரேஷ் ரெய்னா!

இதே போல இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மிடில் வரிசையில் மிகச் சிறப்பான பல ஆட்டங்களை மகேந்திர சிங் தோனி உடன் இணைந்து வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் இவர் ஒரு பகுதி நேர சுழற் பந்துவீச்சாளரும் ஆவார். மேலும் களத்தில் ஃபீல்டிங்கில் இவருடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும். இவரை ஒரு போட்டியிலிருந்து விலக்கி வைப்பது என்பது யாராலும் முடியாத விஷயம்.

கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் பேட்டிங்,பந்துவீச்சு,ஃபீல்டிங் என்று சுரேஷ் ரெய்னா அணிக்கு மிக முக்கியமான வீரர். எந்த ஒரு கேப்டனும் சுரேஷ் ரெய்னா மாதிரியான ஒரு வீரரை விட்டுவிட விரும்பவே மாட்டார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி ஒரு தூண் என்றால் இன்னொரு தூண் உறுதியாக சுரேஷ் ரெய்னாதான். அவர் தற்போது தனது கேப்டன் பதவிக்கான வாய்ப்புகள் குறித்து மனம் திறந்து கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது ” நான் உத்திர பிரதேசம் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறேன். எனக்கு வெளியில் இருந்து பல அணிகளுக்கு கேப்டனாக விளையாடுவதற்கு பலமுறை வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.

மகேந்திர சிங் தோனி என்னிடம் எப்பொழுதும் ‘நான் கேப்டன் நீ துணை கேப்டன். நீ எங்கும் செல்லக்கூடாது’ என்று சொல்லுவார். நான் அவருடைய பேச்சை மீறி நடக்கவில்லை.

மேலும் நான் என்னை எப்பொழுதும் அணிக்கான வீரராகவே உணர்ந்திருக்கிறேன். சக வீரர்களுக்கு உதவி செய்ய வேண்டும், அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” என்று கூறியிருக்கிறார்!