“நேற்று நல்லா விளையாடினேன்.. காரணம் சூர்யா பாய் கொடுத்த இந்த ஐடியாதான்!” – ரிங்கு ஸ்பெஷல் பேட்டி!

0
137
Rinku

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிக வேகமாக இளம் வீரர்களை கொண்ட, அதிரடியான அணுகு முறையை பின்பற்றும் டி20 புதிய இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்குவதில் பெரிதான ஈடுபாட்டை காட்டி வருகிறது.

இதன் காரணமாக இந்திய t20 பேட்டிங் யூனிட்டில் மொத்தமாக இளம் பேட்ஸ்மேன்கள் நிரம்பி இருக்கிறார்கள். முக்கியமான ஃபினிஷிங் இடத்தில் ரிங்கு சிங் இருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனிக்கு பிறகு ஆட்டத்தை நிறைவாக முடித்து வைப்பதில் ரிங்கு சிங் நல்ல நம்பிக்கை கொடுக்கிறார். அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது எப்படியும் ரன்கள் வந்துவிடும் என்று பார்ப்பவர்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது.

மேலும் அவர் பேட்டிங் செய்யும்பொழுது ஆட்டத்தில் இருக்கும் எந்த அழுத்தத்தையும் அவரது முகத்திலோ உடலிலோ பார்க்க முடியாது. அவர் மிகவும் அமைதியாக தெளிவான திட்டத்துடன் விளையாடுகிறார்.

நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் சிக்ஸர்கள் அடிக்கும் எந்த முயற்சியும் இல்லாமல், ஒன்பது பவுண்டரிகள் உடன் 30 பந்தில் தனது முதல் சர்வதேச அரை சதத்தை அடித்தார். அதே சமயத்தில் இறுதிக்கட்டத்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்து, வெற்றி பெறுவதற்கான இலக்குக்கு அணியை கொண்டு சென்றார். ஆனால் மழை செய்த சதியால் இந்திய அணி தோற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்தது குறித்து பேசிய ரிங்கு சிங் “நான் கடைசியாக அடித்த ஷாரட் கண்ணாடியை உடைத்தது எனக்கு அப்பொழுது தெரியாது. நான் அதற்காக இப்பொழுது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் பேட்டிங் செய்ய சென்ற பொழுது நாங்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தோம். எனவே சூழ்நிலை கொஞ்சம் கடினமாக இருந்தது. நான் சூர்யா பாய் உடன் பேசிய பொழுது அவரவர் இயல்பில் விளையாடுவது என முடிவு செய்தோம்.

நான் தொடக்கத்தில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் எனக்கு விக்கெட் எப்படி இருக்கிறது என்று புரியவில்லை. சில பந்துகளை விளையாடிய பிறகு நான் செட் ஆனேன். அதற்குப் பிறகு பெரிய ஷாட்கள் வந்தது.

சூர்யா பாய் என்னிடம் ‘உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் இயல்பில் விளையாடுங்கள்’ என்று சொன்னார். நான் சொன்னது போல எனக்கு ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இல்லை. எனவே சூர்யா பாய் மீண்டும் ‘ அமைதியாக அப்படியே விடுங்கள். பிறகு பெரிய ஷாட்கள் வரும்’ என்று சொன்னார். பின்பு நீங்கள் பார்த்தது போல அப்படித்தான் நடந்தது. சூர்யா பாய் சரியாக வழி நடத்தினார்!” என்று கூறியிருக்கிறார்!