அண்ணன் யுவ்ராஜ் சிங் சொன்ன அந்த ஒரு வார்த்தை, எனக்கு செஞ்சுரி அடிக்க உதவியது – சுப்மன் கில் நெகிழ்ச்சி!

0
182

யுவராஜ் சிங் கொடுத்த நம்பிக்கைதான் என்னை சதமடிக்க வைத்தது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் சும்மன் கில்.

சமீபகாலமாக இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராகவும் மூன்றாவது வீரராகவும் களமிறங்கி அசத்தி வருபவர் சுப்மன் கில். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இரண்டு அரை சதங்கள் உட்பட 205 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது தட்டிச் சென்றார். தற்போது நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஒரு சதம் மற்றும் அரைசதம் உட்பட 245 ரன்கள் அடித்து, மூன்றாவது போட்டியில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இரண்டையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -

ஜிம்பாவே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது 97 பந்துகளுக்கு 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 130 ரன்கள் அடித்தார் கில். இதன் மூலம் சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். வெளிநாட்டு மைதானங்களில் இளம் வயதில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது கில் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறார். முதல் இடத்தில் யுவராஜ் அதற்கு அடுத்த இடத்தில் விராட் கோலி ஆகியோர் இருக்கின்றனர்.

சர்வதேச அரங்கில் தொடர்ந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கில் தனது சமீபத்திய பேட்டியில் தனக்கும் யுவராஜ்-க்கும் இடையே நடந்த உரையாடலை கூறி இருக்கிறார். அதில் சதம் அடிப்பதற்கு யுவராஜ் கூறிய வார்த்தை மிகவும் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இது குறித்து கில் பேசுகையில்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் முடிவுற்ற பிறகு நான் நேராக யுவராஜ் சிங்கை சந்தித்தேன். அவர் எனக்கு சில அறிவுரைகளை கூறினார். மேலும் நன்றாக உனது பேட்டிங் இருந்து வருகிறது அதை தொடர்ந்து வெளிப்படுத்து என்று அறிவுறுத்தினார். அப்போது என்னால் சதம் அடிக்க முடியவில்லை என்று அவரிடம் கூறினேன். உடனடியாக அவர், உனது பேட்டிங் மீது கவனம் செலுத்து, நிச்சயம் உன்னை தேடி வரும் என்று நம்பிக்கை அளித்தார்.

- Advertisement -

நான் மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடியபோது 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று சற்று வருத்தப்பட்டேன். அப்போது அவர் எனக்கு கூறிய இந்த அறிவுரை உதவியாக இருந்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டி குறித்து பேசிய அவர், “மைதானம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பாக இருந்தது மிடில் ஓவர்களில் எனக்கு நல்ல பார்ட்னர்ஷிப் ஆங்காங்கே கிடைத்தது. அதனால் தொடர்ந்து ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடிந்தது.” என்றார்.

இறுதியாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் சிக்கந்தர் ராசா 115 ரன்கள் அடித்து ஆட்டத்தை சிறிது நேரம் ஜிம்பாப்வே வசம் ஈர்த்தார்.