கடந்த ஆட்டத்தில் நான் சில மோசமான முடிவுகளையும் தவறுகளையும் செய்தேன்; எனக்கு யோசிக்க நேரம் இருந்தது – ஹர்திக் பாண்டியா!

0
371
Hardik pandya

ஐபிஎல் 16ஆவது சீசனில் ராஜஸ்தான் அணி தனது சொந்த மைதானமான ஜெய்ப்பூர் மைதானத்தில் குஜராத் அணியை இன்று சந்தித்து விளையாடியது!

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சு கூட்டணி ரசித் கான் மற்றும் நூர் அகமது இருவரும் 17.5 ஓவர்களில் 118 ரன்களுக்கு சுருட்டினார்கள்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை 13.5 ஓவர்களில் எட்டி, சுப்மன் கில் விக்கெட்டை மட்டுமே இழந்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் கில் ஆட்டம் இழந்ததும் களத்திற்கு வந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆடம் ஜாம்பா வீசிய ஓவரில் மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உடன் 23 ரன்கள் துரிதமாகச் சேர்த்தார்.

தொடர்ந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் டெல்லி அணியுடன் கடந்த போட்டியில் அதிரடியாகப் போட்டியை அணுகாமல் தோற்றதற்கான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா
” நூர் அகமது உடன் தொடர்பு கொண்டு அவரை கையாளும் வேலையை நான் ரஷித் கானுக்கு கொடுத்தேன். இருவரும் ஒரே மொழியை பேசக்கூடியவர்கள் என்பதால் வேலை சுலபமாக இருந்தது. மேலும் இந்த வேலைக்கு ரஷீத் கானை விட சிறந்தவர்கள் யாரும் கிடையாது.

எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் பொழுது இது தரமான மைதானம் என்று நினைத்தேன். அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் செயல்பட்டார்கள்.

விர்திமான் சகா நான் விளையாடிய விக்கெட் கீப்பர்களில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்று நான் எப்பொழுதும் நினைக்கிறேன். அவர் மதிப்பு கூட்டி எங்களுடன் பணி செய்யும் விதம் அபாரமானது.

கடந்த ஆட்டத்தில் நான் சில மோசமான முடிவுகளையும் தவறுகளையும் செய்தேன். நான் இன்று கில் ஆட்டம் இழந்து களத்திற்கு வரும் பொழுது பாதி வேலை முடிந்து விட்டிருந்தது. கடந்த ஆட்டத்திற்குப் பிறகு யோசிக்க எனக்கு நிறைய நேரம் கிடைத்தது!” என்று கூறியிருக்கிறார்!