“நான் இந்த காரணத்தால்தான் அந்த டீமை விட்டு வெளியே வந்தேன்” – சிஎஸ்கே வீரர் ஓபன் டாக்!

0
4259
CSK

இந்திய கிரிக்கெட்டுக்கு இதயம் போன்றது மும்பை. அங்கிருந்து வரக்கூடிய வீரர்கள் எப்பொழுதும் ஒரு தனித்தன்மையை கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம் எதையும் விட்டுக் கொடுக்காத ஒரு விடாப்பிடியான குணம் இருக்கும்!

இது கவாஸ்கர், சச்சினில் ஆரம்பித்து இன்று வந்திருக்கும் ஜெய்ஸ்வால் வரை தொடரும் ஒரு பாரம்பரியம். இப்படியான வீரர்களை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பதால் அந்த மாநிலத்திற்கு என்று இந்திய கிரிக்கெட்டில் தனி இடம் உண்டு!

- Advertisement -

இந்த மும்பை கிரிக்கெட் கலாச்சாரத்தில் இருந்து வந்த மற்றும் ஒரு முக்கிய வீரர்தான் ரகானே. ஒரு பேட்ஸ்மேன்னுக்கான திறமையை தாண்டி, அத்தனை ஒழுக்கங்களையும் மிகச் சரியாக வைத்திருக்கும் ஒரு வீரர். மேலும் அமைதியான சுபாபத்தை கொண்டிருந்தாலும், களத்தில் ஒரு கேப்டனாகவும் மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய புத்திசாலி.

இப்படியான சிறப்புகள் எல்லாம் இருந்தாலும், இவரது பேட்டிங் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சரிவுக்கு உண்டாக அணியை விட்டு நீக்கப்பட்டார். பின்பு மாநில மும்பை அணிக்காக விளையாடி, அதிலிருந்து ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்து, தற்பொழுது மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பி, அத்தோடு துணை கேப்டன் ஆகவும் உயர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் ரகானே சில மாதத்திற்கு முன்பு இங்கிலாந்து கவுண்டி டெஸ்ட் கிரிக்கெட் அணியான லீசெஸ்டர்ஷைர் அணிக்கு ஒப்பந்தம் ஆனார். ஆனால் அதிலிருந்து தற்பொழுது திடீரென ரகானே விலகி வந்துவிட்டார்.

- Advertisement -

அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் சுற்றுப்பயணம் அமையவில்லை. மேலும் இந்தியாவுக்கு அடுத்த டிசம்பர் மாதம் இறுதியில்தான் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் இருக்கிறது. இப்படி இருந்தும் ரகானே கவுன்டி கிரிக்கெட் அணியில் இருந்து விலகி வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் ஏன் அப்படியான ஒரு முடிவை எடுத்தார் என்று தற்போது கூறி இருக்கிறார். இது தொடர்பாக ரகானே பேசும் பொழுது ” நாங்கள் விளையாடிய அதிதீவிர கிரிக்கெட் மூலம் கடந்த நான்கு மாதங்கள் மிக மகிழ்ச்சியானது. இப்போது எனக்கு முன்னால் இருக்கும் உள்நாட்டு சீசனுக்காக எனது உடலை மீட்டெடுத்து ரீசார்ஜ் செய்வதற்கான நேரம் இது. எனவே என்னால் இங்கிலாந்தில் விளையாட முடியவில்லை.

எனக்கு எப்பொழுதுமே ஒவ்வொரு காலகட்டத்திலும் எனது மாநில அணியான மும்பைக்கு விளையாடுவது கௌரவமான ஒரு விஷயமாகும். அடுத்து அக்டோபரில் தொடங்கும் உள்நாட்டு சீசனுக்காக சிறப்பாக செயல்பட எனது உடல் தகுதியில் நான் உழைக்க இருக்கிறேன். எனவே நான் லீசெஸ்டர்ஷைர் அணியில் இருந்து வெளியேறி வந்து விட்டேன்!” என்று கூறி இருக்கிறார்!