“2 பேர் விளையாடின வீடியோ பார்த்து நிறைய தெரிஞ்சுகிட்டேன்.. இப்படித்தான் திரும்பி வந்தேன்!” – கேஎல்.ராகுல் சிறப்பு பேட்டி!

0
944
Rahul

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அக்சர் இடத்தில் இடம் பிடித்திருக்கிறார் !

உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுல் இருக்கிறார். இரண்டாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் இருக்கிறார்.

- Advertisement -

கேஎல்.ராகுல் ஆட்ட அணுகுமுறை குறித்து நிறைய விமர்சனங்கள் இருந்தது.அவர் மனநிலைபலவீனமாக இருக்கின்ற காரணத்தினால் அவரது ஆட்டமும் பெரிய அளவில் வெளிப்படுவதில்லை என்கின்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் காலில் காயம் அடைந்து வெளியேறிய அவர், ஆசியக் கோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு திரும்பி வந்து உடனே பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து அசத்தினார். அவர் திரும்பி வந்ததிலிருந்து அவரது ஆட்ட அணுகுமுறை தைரியமாகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

கேஎல்.ராகுல் அணிக்கு நிறைய நெகிழ்வு தன்மையை தரக்கூடியவர். துவக்க வீரராக விளையாட முடியும். மிடில் வரிசையில் வர முடியும். விக்கெட் கீப்பிங் செய்ய முடியும். கேப்டன் பொறுப்பையும் பார்த்துக் கொள்ள முடியும். இவர் ஒருவர் அணியில் இருக்கும் பொழுது இதை வைத்து பிளேயிங் லெவனை பல மாதிரி மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த நிலையில் தான் எப்படி திரும்பி வந்தேன் என்று அவர் கூறும் பொழுது
“நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் பேட்டிங் செய்வது வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் துவக்க வீரராக பேட்டிங் செய்து இந்த இடத்தில் பேட்டிங் செய்வதில் வித்தியாசம் இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு மிடில் வரிசையில் விளையாடும் ரோல் கொடுக்கப்பட்டது. மற்றும் நான் அந்த இடத்தில் நீண்ட காலம் விளையாடினேன். இதன் காரணமாக நான் தொழில்நுட்ப ரீதியாகவும், மனரீதியாகவும் செய்ய வேண்டிய மாற்றங்களையும், எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

மேலும் நான் விளையாட்டில் இருந்து சில காலம் தள்ளி இருந்தேன். அந்த நேரத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் சிறப்பாக விளையாடிய இரண்டு வீரர்களின் வீடியோக்களை பார்த்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இதனால் நான் மிடில் வரிசையில் பேட்டிங் செய்ய செல்லும் பொழுது, சூழ்நிலைகளை கணக்கிட்டு புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு விளையாடுகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!