“என்ன செய்யனும்னு தெரியும்.. நாளைக்கு இதான் பேட்டிங் ப்ளான்!” – ரோகித் சர்மா வெளிப்படையான அறிவிப்பு!

0
8195
Rohitsharma

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் உலகக்கோப்பை 13-வது தொடரில் இறுதிப்போட்டி நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.

இதில் மூன்று முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இரண்டு முறை உலக சாம்பியன் ஆக வந்த இந்தியாவும், 7 முறை உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று 5 முறை உலக சாம்பியன் ஆக வந்த ஆஸ்திரேலிய அணியும் மோதிக் கொள்கின்றன.

- Advertisement -

இந்த இரு அணிகளும் ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ரிக்கி பாண்டிங் மற்றும் கங்குலி தலைமையில் கொண்ட அணிகளை வைத்து மோதினார்கள். அதில் ஆஸ்திரேலியா அபாரமான முறையில் வெற்றி பெற்றது.

தற்பொழுது 20 வருடங்கள் கழித்து இரண்டு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் மோத இருக்கின்றன. 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் நடைபெறுவது இந்திய அணிக்கு கொஞ்சம் சாதகமான விஷயம்.

நாளை இறுதி போட்டிக்கு இந்திய அணியின் பேட்டிங் மற்றும் தன்னுடைய தனிப்பட்ட பேட்டிங் அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கும் என்று கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “எனக்கு என்ன முக்கியம் என்று பார்க்கும் பொழுது நான் சென்று சுதந்திரமாக விளையாடுவது முக்கியம். அதே சமயத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் என்னுடைய ஆட்ட அணுகுமுறையை நான் கொஞ்சம் மாற்றியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அந்த போட்டியில் நாங்கள் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்தோம். இதன் காரணமாக நான் கொஞ்சம் எனது ஆட்டத்தை மாற்ற வேண்டி இருந்தது. நான் அப்படியும் மாற்றிக் கொண்டு விளையாட தயாராக இருக்கிறேன்.

அனுபவம் வாய்ந்த வீரர் செய்ய வேண்டியது இதைத்தான். நீங்கள் ஒரே வழியில் சென்று விளையாட வேண்டும் என்று நினைக்க முடியாது. உங்கள் விரைவாக உங்களுக்கு முன்னால் இருக்கும் சூழ்நிலைகளை புரிந்து அதற்கு ஏற்றவாறு விளையாட வேண்டும்.

இதுதான் அணிக்கு சரியான நான் கொடுக்கும் பங்காக இருக்கும் என்று நினைக்கிறேன். இதை வைத்து நான் எனது ஆட்டத்தை தயார் செய்து உள்ளேன். இதைச் சுற்றியே என்னுடைய வியூகங்களும் இருக்கிறது. எனவே ஒரு பேட்ஸ்மேன் ஆக என்ன செய்ய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!