“கேப்டனா இருக்க என்ன வேணும்னு தெரியும்.. முக்கியமா விசுவாசம் வேணும்!” – சுப்மன் கில் உள்குத்து பேச்சா?

0
565
Gill

கடந்த ஐபிஎல் தொடருக்கு எட்டு அணிகளில் இருந்து 10 அணிகளாக உயர்த்தப்பட்டது. இதில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த லக்னோ மற்றும் குஜராத் அணிகள் வந்தன.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டதோடு, கேப்டனாகவும் கொண்டுவரப்பட்டார். ஏலத்தில் அந்த அணி மிகவும் பின்தங்கிய அணி எனக் கணிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் எல்லோரது கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி முதல் சீசனிலேயே சாம்பியன் ஆகி அசத்தியது. மேலும் இரண்டாவது சீசனில் கோப்பையை நெருங்கி வந்து இறுதிப்போட்டியில் இறுதிப்பந்தில் தோற்றது.

இப்படிப்பட்ட ஒரு அணிக்கு கேப்டனாக இருந்து தான் தற்பொழுது அதை வேண்டாம் என்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. இது எல்லோரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் கொண்டுவரப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து சுப்மன் கில் கூறும் பொழுது “கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது சிறந்த உணர்வு. எனக்கு ஏழு எட்டு வயது இருக்கும் பொழுது ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் யாரும் விளையாட விரும்பும் தொடராக ஐபிஎல் இருக்கிறது. வெளிப்படையாகவே, விளையாடுவதும் அணிக்கு கேப்டனாக இருப்பதும் என்பது கனவு. இந்த அணியில் அப்படி ஒரு பிணைப்புக்கான காரணியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

எங்கள் அணியில் கேன் வில்லியம்சன், ரஷீத் பாய், டேவிட் மில்லர் மற்றும் விருத்திமான் சகா, சமி பாய் என தலைமைக்கான தகுதியோடு பலவீரர்கள் இருக்கிறார்கள். எனக்கு வெளிப்படையாக இங்கு நிறைய கற்றல்கள் இருக்கும். இதுவே சிறப்பானதாகவும் இருக்கும். எனக்கு இது மங்கலான ஒரு தொடக்கம். எனவே உங்களின் ஆசிகளும் ஆதரவும் வேண்டும்.

கேப்டன்ஷிப் என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது. அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, ஒழுக்கம் இதுவெல்லாம் அதற்குள் அடக்கம். மேலும் கேப்டன்ஷியில் விசுவாசம் என்பது முக்கியம். நான் சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடி இருக்கிறேன். அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர்களுக்கு கீழ் விளையாடி நான் பெற்றுக் கொண்டது எல்லாம், எனக்கு ஐபிஎல் தொடரில் கேப்டன் ஆக உதவும்!” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!