“தோனி இந்த காரணத்தினால் யுவராஜ்க்கு முன்பாக இறங்குவார் என்று எனக்குத் தெரியும்” – 2011 உலக கோப்பை பைனல் பற்றி முத்தையா முரளிதரன் பேட்டி !

0
14645

2011 ஆம் ஆண்டு எம் எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது . வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கௌதம் கம்பீர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ் எட்டு போட்டிகளில் ஆடி 362 ரன்களை குவித்திருந்தார் . இதில் நான்கு அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும் . மேலும் பந்துவீச்சின் மூலம் 15 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார் .

- Advertisement -

இறுதிப் போட்டியின் போது முதலில் ஆடிய இலங்கை அணி 275 ரன்கள் எடுத்தது . அந்த அணியின் மகிலா ஜெயவர்த்தனே மிகச் சிறப்பாக ஆடி சதம் எடுத்தார் . 276 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் துவக்கத்திலேயே ஆட்டம் இழந்தனர் . 31 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் மூன்றாவது விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சர்வில் இருந்து மீட்டனர் . சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த விராட் கோலி 35 ரன்களில் ஆட்டம் இழந்தார் .

இதனால் இந்தியா 114 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது . வெற்றிக்கு 155 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யுவராஜ் சிங் களத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அணித் தலைவர் எம்எஸ்.தோனி களம் இறங்கினார். அவரும் கௌதம் கம்பீரம் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர் . சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கௌதம் கம்பீர் 97 ரன்களில் ஆட்டம் இழந்தார் . இதன் மூலம் உலக கோப்பை இறுதிப் போட்டியில் சதம் எடுக்கும் வாய்ப்பையும் அவர் இழந்தார் .

அதன் பிறகு களம் இறங்கிய யுவராஜ் சிங் தோனியுடன் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் . ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 276 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது . டோனி 79 பந்துகளில் 91 ரன்கள்டனும் யுவராஜ் சிங் 24 பந்துகளில் 21 ரன்கள்டனும் களத்தில் இருந்தனர் . 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடாத தோனி இறுதிப் போட்டியில் தான் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அந்த உலகக் கோப்பை முடிந்து 12 ஆண்டுகள் ஆகியும் யுவராஜ் இங்க இருக்கு முன்பாக தோனி விளையாட வந்தது பற்றி இன்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன . இன்றைய உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியிட்ட போது அந்த விழாவில் கலந்து கொண்ட இலங்கை அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் இதுகுறித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்து இருக்கிறார் .

அந்தப் பேட்டியில் பேசி இருக்கும் அவர் ” யுவராஜ் சிங் என்னுடைய பந்தி வீட்டிற்கு எதிராக தடுமாறுவார் என்று எனக்குத் தெரியும் . அவர் அந்த உலகக்கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார் . ஆனால் யுவராஜிற்கு முன்பாக தோனி விளையாட வருவார் என்று எனக்கு அப்போதே தெரியும் . நானும் தோனியும் சிஎஸ்கே அணிக்கு விளையாடி இருக்கிறோம் . அதனால் என்னுடைய பந்துவீச்சுக்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று மகேந்திர சிங் தோனிக்கு தெரியும் . அதனால் யுவராஜிற்கு முன்பாக அவர் நிச்சயமாக களமிறங்குவார் என்று அப்போதே நினைத்திருந்தேன். அது போலவே அவரும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்றுத் தந்தார்” என்று தெரிவித்துள்ளார் ,