“சச்சினுக்கு நடந்த மாதிரியே விராட் கோலிக்கும் நடக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு” – கங்குலி கணிப்பு!

0
4062
Ganguly

இந்த ஆண்டு இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக நடைபெற இருக்கிறது!

இதற்கு போட்டி நடைபெறும் இடங்கள் நேற்று முழுமையாக அட்டவணை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியில் சென்னையில் ஆஸ்திரேலியா அணியைச் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்திய அணி கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் வென்றிருந்தது. அந்த உலகக் கோப்பை இந்தியாவில் நடந்தது.

அதற்குப் பிறகு இப்பொழுது உலகக் கோப்பை இந்தியாவில் நடக்க இருப்பதால் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா என்று பரவலான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் இருக்கிறது.

சமீப காலத்தில் ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் சுமாராகவே இருந்து வருகிறது. தோற்றால் வெளியேற வேண்டிய நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி திட்டங்களிலும் செயல்பாட்டிலும் மோசமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை குறித்து கங்குலி கூறும் பொழுது ” எனக்கு கடந்த காலத்தில் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை ஆனால் இப்பொழுது நம்பிக்கை இருக்கிறது. நான் பர்பாமென்ஸை நம்புகிறேன். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு 34 – 35 வயது ஆகிறது. இப்பொழுது ஒவ்வொரு ஆண்டுமே உலகக் கோப்பைகள் இருக்கிறது.

ஆனால் எங்களுடைய காலத்தில் நான்கு வருடத்திற்கு ஒருமுறைதான் உலகக்கோப்பை இருந்தது. நடுவில் சாம்பியன்ஸ் டிராபி வந்தது. எனவே உலக கோப்பையை வெல்வது என்பது தற்பொழுது பெர்ஃபார்மென்ஸ் பற்றியது. எனவே கேப்டனாக ரோகித்தும் வீரராக விராட் கோலியும் உலகக்கோப்பையை வெல்வதற்கு வேலை செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

இதை அவர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக செய்வார்கள் என்று சொல்லவில்லை வெற்றி பெற வேண்டும் என்று விளையாடுவார்கள் என்று சொல்கிறேன். இது மிகப்பெரிய ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்!

2011 உலக கோப்பை இறுதிப் போட்டியின் முடிவில் சச்சின் குறித்து விராட் கோலி பேசும் பொழுது ‘சச்சின் 21 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டை தன் தோள்களில் சுமந்ததாக கூறியிருப்பார். இப்பொழுது விராட் கோலியும் அந்த இடத்தில் இருக்கிறார்.