சாய் சுதர்சன் இரண்டு ஆண்டுகளில் ஐபிஎல் இந்திய அணிக்காகவும் பெரிதாக செய்வார் என்று நம்புகிறேன் – ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
2635
Hardikpandya

புதிய அணியாக வந்து, யாருடைய கணிப்பிலும் இல்லாமல், முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை அடித்து, எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளிய, குஜராத் அணியின் வெற்றி, அந்த அணியின் இரண்டாவது சீசனான ஐபிஎல் 16 வது சீசனிலும் தொடர்கிறது!

இன்று ஐபிஎல் 11வது சீசனின் ஏழாவது போட்டியில் டெல்லியில் வைத்து டெல்லி அணியை எதிர்கொண்டது குஜராத் அணி. இந்த போட்டிக்கான டாசில் வென்று டெல்லி அணியை பேட்டிங் செய்ய வைத்த குஜராத் அணி, தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் 162 ரன்கள் மட்டுமே டெல்லி அணி எடுக்க அனுமதித்தது.

- Advertisement -

இதற்கடுத்து களமிறங்கி இலக்கை நோக்கி விளையாடிய பொழுது கேப்டன் ஹர்திக் பாண்டியா விக்கெட் வரை மூன்று விக்கெட்டுகளை முன்கூட்டியே இழந்து விட்டாலும், இதற்கு அடுத்து தமிழக வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தாலும், மேலும் இறுதி நேரத்தில் வந்து 16 பந்தில் 31 ரன்கள் குவித்த மில்லரின் அதிரடியான ஆட்டத்தாலும் 18.1 ஓவரில் எளிதான வெற்றியை டெல்லியை வீழ்த்தி பெற்றுக் கொண்டது.

இந்த சீசனில் தனது முதல் போட்டியில் இதேபோல் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் எளிதாகவே சென்னை அணியையும் வீழ்த்தி இருந்தது. இன்று மீண்டும் முதலில் பேட்டிங் செய்து அதேபோல் எளிதாக டெல்லி அணியையும் வீழ்த்தி இருக்கிறது.

குஜராத் அணியின் பலமாக பந்து வீச்சும், அதேபோல் அணிக்கு தேவைப்படும் நேரத்தில் யாராவது ஒருவர் மிகச் சிறப்பாக விளையாடுவதும் பெரிய பலமாக கடந்த சீசன் முதற்கொண்டு இருந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் முகமது சமி, அலஜாரி ஜோசப், ரஷித் தான் என டெல்லி விக்கட்டுகளை வீழ்த்தி நெருக்கடியை ஏற்படுத்தினால், பேட்டிங்கில் இளம் வீரர் சாய் சுதர்சன் வந்து பொறுப்பாக விளையாடிய அரை சதம் அடித்து முடித்துக் கொடுக்கிறார்.

- Advertisement -

வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சியாக பேசிய ஹர்திக் பாண்டியா ” ஆட்டத்தின் ஆரம்பத்தில் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை ஆனால் ஏதோ நடந்தது. நாங்கள் பவர் பிளவில் கொஞ்சம் ரண்களை சேர்த்து தந்து விட்டோம். ஆனால் பின்பு எங்கள் பந்துவீச்சாளர்கள் திரும்பி வந்தது மிகச் சிறப்பானது. கேப்டன்சியை பொறுத்தவரை நான் எனது உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படவும் என்னை நான் பேக் செய்து கொள்ளவும் விரும்புகிறேன். யாருடைய முடிவின்படியும் நடக்காமல் என்னுடைய முடிவின்படி நான் கீழே விழுந்தாலும் பரவாயில்லை!” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா “அணிக்கு தேவைப்படும் நேரத்தில் யாரோ ஒருவர் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிக்கு நடத்திச் செல்கிறார். வீரர்களிடம் எது நடந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். சாய் சுதர்சன் அழகாக பேட்டிங் செய்கிறார். அவருடைய கடின உழைப்புக்கான பலனை நீங்கள் பார்க்கிறீர்கள். இரண்டு வருடங்களில் அவர் ஐபிஎல் மாதிரியான தொடர்களிலும் இந்திய அணிக்காகவும் பெரிய அளவில் ஏதாவது செய்வார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்!