“எங்க பிளேயர்ஸ் இந்தியாவை ஈசியா விட மாட்டாங்க” – பிரைன் லாரா ஆச்சரியமான பேச்சு!

0
210
Lara

ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் தற்பொழுது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைகளுக்கு தகுதி பெற முடியாத அளவுக்கு சரிந்து போய் இருக்கிறது.

சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் படுதோல்வி அடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு கடினமான நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் தமது உள்நாட்டில் வலிமையான இந்திய அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது.

இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட மூன்று தொடர்கள் நடக்க இருக்கின்றன. இதில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டி டொமினிக்காவில் வருகின்ற 12ஆம் தேதி துவங்குகிறது.

இதற்காக 13 பேர் கொண்ட அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதில் கிர்க் மெக்கன்சி, அலெக் அதானஸ் என்ற இரண்டு புதிய வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பங்களாதேஷ் சென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியில் இடம் பெற்று மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த தொடர் குறித்து பேசி உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் பிரைன் லாரா சில முக்கியமான நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டு பேசியிருக்கிறார். பொதுவாக அவர் இப்படி பேச மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாரா கூறும்பொழுது “எங்களுக்கு அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டு வருட ஓட்டத்துக்கான ஆரம்பம் இரண்டு முக்கியமான டெஸ்ட் போட்டிகள் உடன் தொடங்குகிறது. இது இந்தியாவுக்கு எதிரானது. இந்தியா உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மிகச் சிறப்பாக விளையாடக்கூடிய அணி.

நாங்கள் முகாமை எங்கிருந்து தொடங்கினோம், தற்பொழுது எங்கு இருக்கிறோம் என்கின்ற வகையில் நாங்கள் சரியாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம். முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. இது ப்ராத்வெயிட் தலைமையிலான ஒரு இளம் அணி.

ஆனாலும் இந்தத் தொடரில் சில வீரர்கள் தனித்துவமாக வெளியே வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு கடுமையான போட்டி நிறைந்த தொடராகும். ஆனால் இவர்களிடமிருந்து சிறந்ததை பெற முடியும் என்று நான் உணர்கிறேன்.

இவர்கள் திறமையானவர்கள் ஆனால் இவர்கள் முதல் தரப் போட்டிகளில் அனுபவம் பெற்று நிறைய சாதித்து இருந்தால், அது குறித்த நம்பிக்கை இருந்திருக்கும்தான். இவர்களுக்கு அப்படி எதுவும் கிடையாது ஆனால் இவர்களிடம் நல்ல திறமை இருக்கிறது.

இந்த நிலையில் இருந்து நீங்கள் ஒரு சர்வதேச வீரராக வருகிறீர்கள் என்றால், நீங்கள் எந்த வயதில் உள்ளே வந்தாலும் மிக விரைவாகக் கற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் கற்றுக் கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று நான் நினைக்கிறேன்!” என்று கூறியுள்ளார்!