“நான் எவ்வளவோ பார்த்து இருக்கேன் ஆனா இந்திய கேப்டன் பண்ணது ரொம்ப திமிர்த்தனம்” – அப்ரிடி ஹர்மன்பிரித் கவுருக்கு கண்டனம்!

0
2520
Afridi

சமீபத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.

இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கைப்பற்றியது.

- Advertisement -

இதற்கு அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமனில் முடிந்தது. இதில் ஒரு ஆட்டம் மழையின் காரணமாக முடிவு தெரியாமல் போகவில்லை. மாறாக இரு அணிகளும் மூன்றாவது போட்டியில் ஒரே ரன்னை எடுக்க டை ஆனது.

இதில் டை ஆன போட்டியில்தான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்து கொண்ட முறை பலராலும் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

அந்தப் போட்டியில் அவருக்கு நடுவர் எல்பிடபிள்யு கொடுக்க, அதற்கு ஆட்சேபம் தெரிவித்த இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கோபமாக ஸ்டெம்பை பேட்டால் அடித்து விட்டு வெளியேறினார். மேலும் பரிசளிப்பு நிகழ்ச்சியின் பொழுது பங்களாதேஷ் கேப்டனை பார்த்து ‘நடுவரையும் புகைப்படம் எடுக்க சேர்த்துக்கொள், நடுவர் இல்லாமல் உன்னால் இருக்க முடியாது” என்று கூற, பங்களாதேஷ் கேப்டன் தனது அணியுடன் புகைப்பட நிகழ்விலிருந்து வெளியேறினார்.

- Advertisement -

மேலும் போட்டியின் முடிவில் பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது பேசிய இந்திய கேப்டன் “இனி அடுத்த முறை பங்களாதேஷ் வரும்பொழுது நடுவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசித்து அதற்கும் தயாராக வேண்டும்” என்று பேசி இருந்தார்.

இதெல்லாம் சேர்த்து அவருக்கு வெளியில் இருந்து பல கண்டனங்கள் எழ காரணமாக அமைந்தது. பல முன்னாள் வீரர்கள் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தார்கள். மேலும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இரண்டு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் ஷாகித் அப்ரிடி
“இதுபோல் நடந்து கொண்டது இந்தியா மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் இது போன்ற விஷயங்களை பார்த்து இருக்கிறோம். இருப்பினும் பெண்கள் கிரிக்கெட்டில் இப்படியானவகைகளை அதிகம் பார்க்க முடியாது.

இந்திய கேப்டன் நடந்து கொண்டது மிகவும் ஓவராக இருந்தது. இது ஐசிசி கீழ் நடக்கும் பெரிய தொடர். நீங்கள் எதிர்கால தலைமுறைக்கு உதாரணமாக இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் ஆக்ரோஷம் இருக்க வேண்டியதுதான், ஆனால் அது கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். இந்திய கேப்டன் நடந்து கொண்டது மிக மிக அதிகமான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்.