ஆரம்பிச்ச இடத்துக்கு வந்திருக்கேன் ; அசத்த உற்சாகமா காத்திருக்கேன் ; பழைய முக்கியமான நினைவுகளில் மூழ்கிய முகமது சிராஜ்!

0
183
Siraj

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ட்ப்ரீத் பும்ரா காயத்தால் இல்லாத நிலையில், அவரது இடத்தில் மிகச்சிறப்பான வேகப்பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார் முகமது சிராஜ்!

கடந்த ஆண்டு முதல் அவரது வேகப்பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டில் அவர் ஒருநாள் கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரிலும் 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை 7.70 எக்கனாமியில் வீழ்த்தி பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய பலமாக விளங்கி வருகிறார்.

ஆனால் அவரது ஆரம்ப காலங்கள் ஐபிஎல் தொடரில் அவ்வளவு இனிமையாக இருக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு 2.50 கோடிக்கு ஹைதராபாத் இவரை வாங்கியது. 2018 முதல் கடந்த ஆண்டுக்கு முன் வரை 2.60 கோடிக்கு பெங்களூர் அணியால் தொடர்ச்சியாக பிடித்து வைக்கப்பட்டு வாய்ப்பு பெற்றார்.

இவரது இந்த வளர்ச்சியில் இதனால் விராட் கோலிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் பெங்களூர் அணி இவரை வெளியே விடாமல் தக்கவைத்து ஏழு கோடிக்கு வைத்துக் கொண்டது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் முதன்முதலாக ஹைதராபாத் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பந்து வீசிய அனுபவத்தை பேசியுள்ள முகமது சிராஜ்
“நான் 2017 ஹைதராபாத் அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் எனக்கு ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆறு போட்டிகளுக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்தது.

அப்போதைய பயிற்சியாளர் டாம் மூடி என்னை அழைத்து எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் வீட்டில் இருப்பதாகச் சொன்னேன். அவர் என்னிடம் இன்று நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று கூறினார் அப்போது என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை. நான் உடனே ஸ்டேடியத்திற்கு திரும்பி டெல்லிக்கு எதிரான எனது அறிமுகத்தைத் தொடங்கினேன்.

மக்கள் நிறைந்த ஸ்டேடியத்தில் முதல்முறையாக விளையாடுவது மிகவும் பதட்டமாக இருந்தது. அப்பொழுது நான் உணர்ந்த அழுத்தத்தை வெளிப்படுத்த முடியவில்லை. என் உடல் கனமாகிவிட்டதாக நான் ஓடும் பொழுது என் கால்கள் கனமாகிவிட்டதாக உணர்ந்தேன். முதலில் ஒரு மூணு ரண்களுக்கு நான் அடிக்கப்பட்டேன். அடுத்து பவுண்டரி சென்றது. ஆனால் நான்காவது பந்தில் எனக்கு விக்கெட் கிடைத்தது. அதனால் அழுத்தம் என் மீது குறைந்தது.

இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக அதே ராஜீவ்காந்தி மைதானத்தில் முக்கிய போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடுவதற்கு காத்திருக்கிறேன். இந்த ஆடுகளத்தில் நல்ல பவுன்ஸ் உடன் வேகப்பந்துவீச்சாளர்கள் அனுகூலங்களை பெறுகிறார்கள். மேலும் இங்கு வேகமும் சுவிங் இருக்கிறது. இன்று இங்கு பந்து வீச இருப்பது உற்சாகமாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!