“இந்திய டீம் மேல எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான்.. இதை மட்டும் செஞ்சிருக்கலாம்” – தினேஷ் கார்த்திக் ஏமாற்றம்!

0
177
DK

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு நடந்து கொண்டிருக்கின்ற பிரச்சனைகள் எல்லாம் வித்தியாசமானவைகளாக இருக்கிறது. அதேசமயத்தில் அவர்களால் அதை உடனுக்குடன் தீர்க்க முடியாததாகவும் இருக்கிறது!

இந்த வகையில் பார்த்தால் இந்திய அணிக்கு திடீரென்று இடதுகை பேட்ஸ்மேன்கள் யாருமே இல்லாதது போல் ஆனது. இதன் காரணமாக இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் வலதுகை வீரர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இடதுகை பேட்ஸ்மேன் தேவை ஏன் இருக்கிறது? என்றால், இடது மற்றும் வலதுகை பேட்ஸ்மேன் கல் சேர்ந்து விளையாடும் பொழுது பந்துவீச்சாளர் ஒரே மாதிரி பந்தை வீச முடியாது. இதனால் அவர் லைன் அண்ட் லென்த் பாதிக்கப்படும். மேலும் பில்டிங் பொசிஷன்களும் மாறிக்கொண்டே இருக்கும். இது எதிரணி தவறு செய்ய அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது.

இதற்கான தீர்வாக திரும்பிப் பார்த்தால் இந்திய அணியில் தற்பொழுது இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், திலக் வருமா மற்றும் ரிங்கு சிங் என அற்புதமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் இருந்தும் கூட இவர்களை இப்பொழுது தேவைக்கு அணிக்குள் உடனே கொண்டு வர முடியாது. காரணம் அனுபவம் இல்லை.

இதே பிரச்சனைதான் இடதுகை சார்ந்து இந்திய அணிக்கு பந்து வீச்சிலும் இருக்கிறது. சிறிய அணிகள் முதல் கொண்டு அதாவது அயர்லாந்து வரை ஒரு இடதுகை வேகம் பந்துவீச்சாளரை எப்பொழுதும் பவுலிங் யூனிட்டில் வைத்திருக்கிறது. வலதுகை பேட்ஸ்மேன்கள் இவர்களை எதிர்த்து விளையாடுவது சிரமமான ஒன்று. ஆனால் உலகின் பெரிய அணிகளில் ஒன்றான இந்தியாவிடம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. மேலும் இடதுகை பேட்ஸ்மேன்களும் தற்போது இல்லை.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “உலகக்கோப்பை 2023 இந்திய அணி திட்டத்தில் அர்ஸ்தீப் சிங் இருக்கப் போவதில்லை என்பதில் இந்தியா தெளிவாக இருந்தது. இது அவர்களுடைய தெளிவை காட்டுகிறது. அவர்களுடைய விக்கெட் எடுக்கும் ஆப்ஷனாக அவரை இவர்கள் நினைக்கவில்லை.

இந்திய அணி நிர்வாகம் அவர் குறித்து என்ன நினைத்தது? என்று என்னால் உணர முடிகிறது. அவரால் மிடில் ஓவர்களில் வீச முடியாது, மேலும் புதிய பந்திலும் விக்கெட் எடுக்க முடியாது என்று நினைக்கிறது.

இந்தியா இடது கை வேகம் பந்துவீச்சாளர் என்கின்ற ஆப்ஷனை தவற விடுகிறதா? என்று கேட்டால் நிச்சயம் தவற விடுகிறது. ஏனென்றால் கிரிக்கெட்டில் எந்த வடிவத்திலும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது தாக்கத்தை தரக்கூடியது. உலகில் உள்ள பெரிய நல்ல அணிகளிடம் எப்பொழுதும் தரமான இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். மற்ற அணிகளுக்கு எதிராக யார் யார்? இப்படி வருகிறார்கள் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்.