“கடைசி 9 மாசமா நான் இதை செய்யல.. டீம்காக தியாகம் பண்ணி இருக்கேன்!” – ரோகித் சர்மா செய்த முக்கிய காரியம்!

0
381
Rohit

இந்திய அணி உள்நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை விளையாடுகிறது. அக்டோபர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் இந்திய அணியின் உலகக் கோப்பை பயணம் ஆரம்பிக்கிறது!

உள்நாட்டில் உலகக் கோப்பை தொடரை விளையாட இருக்கின்ற காரணத்தினால் நிலைமைகள் நன்கு தெரியும் என்கின்ற சாதகம் இந்திய அணிக்கு இருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் பல ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்களின் முன்னிலையில், சொந்த நாட்டில் நடக்கும் உலகக்கோப்பை வென்றே ஆக வேண்டும் என்கின்ற நிலையில் விளையாடுவது பெரிய அழுத்தத்தை கொடுக்கக் கூடிய விஷயமாகவும் இந்திய அணிக்கு இருக்கிறது.

கிரிக்கெட்டைப் பொருத்தவரை அழுத்தத்தை ஒரு வீரர் எவ்வாறு கையாளுகிறார் என்பதை பொறுத்துதான் அவர் சாதாரண வீரராக முடிக்கிறாரா, அல்லது வெற்றிகரமான வீரராக மாறுகிறாரா? என்பது அமைகிறது.

2011 ஆம் ஆண்டு இந்திய அணி சொந்த நாட்டில் உலகக் கோப்பையை வென்ற பொழுது, அணியில் ஒரு விதி உருவாக்கப்பட்டு எந்த வீரர்களும் செய்தித்தாள்கள் படிக்கக் கூடாது என்று என்று கொண்டுவரப்பட்டது. வீரர்களும் அதைப் பின்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு ஒரு படி மேலே போய் சச்சின் டெண்டுல்கர் மக்கள் அதிகம் இருக்கும் விமான நிலையம் மற்றும் ஹோட்டல் போன்ற இடங்களில், எந்தவிதமான வெளிப்புற பேச்சுகளையும் கேட்கக்கூடாது என்று காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு இருந்தார். இதை அனைவரும் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அணி வீரர்கள் அதை பின்பற்றினார்கள். இதை தற்போது இந்திய அணியினர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ரோஹித் சர்மா கூறும் பொழுது “கடந்த 9 மாதங்களாக என்னுடைய மொபைலில் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டும் கிடையாது. நான் ஏதாவது கமர்சியல் போஸ்ட் செய்ய வேண்டும் என்றால் அதை என் மனைவி பார்த்துக் கொள்கிறார்.

இது கவனச் சிதறலை உண்டாக்குவதோடு, நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குகிறது. அதனால்தான் அவற்றை என் தொலைபேசியில் வைத்திருக்க வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன். ஏனென்றால் அது இருந்தால் நிச்சயம் அதை நான் பார்ப்பேன்!” என்று கூறியிருக்கிறார்!