என்ன மொத்தமா முடிச்சுவிட பிளான் பண்ணாங்க.. ஆனாலும் இப்போ உங்க முன்னாடி கேப்டனா நிக்கிறேன்னா அதுக்கு காரணம் இதுதான் – ஹர்திக் பாண்டியா உருக்கமான பேட்டி!

0
592

என்னுடைய கடின உழைப்பால் மட்டுமே இவ்வளவு தூரம் உயர்ந்திருக்கேன் என உருக்கமாக பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா.

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியா, 2022 ஆம் ஆண்டு தனது கடின உழைப்பின் மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பல ஆண்டுகள் முன்னோக்கி எடுத்துச் சென்றிருக்கிறார்.

2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவரால் மீண்டும் பந்து வீச முடியாது. அப்படியே வீசினாலும் ஒன்று, இரண்டு ஓவர்கள் மட்டுமே வீச முடியும் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.

ஆனாலும் விடாமுயற்சியால் எதையும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே வந்தார். 2021 ஆம் ஆண்டு மும்பை அணியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். இது பெருத்த இடியாக அவருக்கு அமைந்தது.

அந்த தருணத்தில் பாண்டியா மீது நம்பிக்கை வைத்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம், இவரை தனது அணிக்கு எடுத்து கேப்டனாகவும் நியமித்தது. அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக, 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை இரண்டிலும் அசத்தினார். மிகச் சிறந்த கேப்டனாகவும் வலம் வந்தார்.

இதன் எதிரொலியாக, குஜராத் டைட்டன்ஸ் அணி பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை தட்டி சென்றது. அதேபோல் கேப்டன் பொறுப்பேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை பெற்று பெருமிதம் சேர்த்தார்.

அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட பிசிசிஐ, மீண்டும் டி20 அணிக்குள் ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு கொடுத்தது. ஆசியகோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால், டி20 உலகக்கோப்பை தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் இவருக்கு தற்போது கேப்டன் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கேஎல் ராகுல், பும்ரா ஆகிய முன்னணி வீரர்கள் வரிசையில் இருக்கையில் நேரடியாக இவருக்கு கேப்டன் பொறுப்பு வந்தது. ஆச்சரியமாக இருந்தாலும் கடந்த ஓராண்டாக இவரது பங்களிப்பு அது போல இருந்திருக்கிறது.

அடுத்ததாக ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பும் இவருக்கு கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது. அதற்கு அடுத்ததாக டெஸ்ட் போட்டிகளுக்கும் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என பேசப்படுகிறது.

இந்நிலையில் தனது சமீபத்திய பேட்டியில் மீண்டும் இந்திய அணிக்குள் இடம் பிடித்தது எப்படி? மேலும் கேப்டன் பொறுப்பில் என்னென்ன கவனம் செலுத்தப் போகிறீர்கள்? டெஸ்ட் கேப்டன் பொறுப்பும் உங்களுக்கு கிடைக்குமா? என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதற்கு பதில் அளித்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா. அவர் பேசுகையில்,

“முதலில் எனது கவனம் அனைத்தும் எனக்கு கொடுக்கப்பட்ட டி20 போட்டிகளின் மீது தான் இருக்கிறது. அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் புதிய பொறுப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் எனது முழு கவனம் இருக்கும். விரைவாக டி20 உலக கோப்பைக்கு முன்பு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை வருகிறது. அதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்.”

“உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்திய அணிக்குள் எனக்கு நடந்ததை வெளியில் சொல்ல முடியாது. இங்கே அங்கே என எடுப்பதும் வெளியே அனுப்புவதுமாக இருந்தார்கள். மீண்டும் அணிக்குள் இடம் பிடித்திருக்கிறேன் என்றால் அதற்கு எனது கடின உழைப்பு தான் காரணம். விடா முயற்சியால் மட்டுமே சாத்தியமானது. இந்த இடைப்பட்ட காலத்தில் நல்ல மனநிலையை வளர்த்துக் கொண்டேன். அதன் காரணமாகத்தான் இப்போது கேப்டன் பொறுப்பு கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.”

காயம் ஏற்படுவது வீரர்களுக்கு இயல்பு அதை எவராலும் மாற்ற முடியாது. அதே நேரம் அதிலிருந்து மீண்டு வந்து என்ன செய்கிறோம். காயம் ஏற்பட்டபோது எப்படிப்பட்ட மனநிலையை வளர்த்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். மேலும் முடிவுகளைப் பற்றி யோசிக்காமல், அதை நோக்கி நாம் செயல்படும் விதத்தை நன்றாக வைத்துக் கொண்டால் நீண்ட காலத்திற்கு உங்களால் சிறப்பாக செயல்பட முடியும்.” என்றார்.