“இந்திய டீம்க்கு செலக்ட் ஆயிட்டேன்.. இதவச்சு ஒரு முக்கியமான வேலை செய்ய போறேன்” – துருவ் ஜுரல் பேட்டி

0
134
Jurel

தற்பொழுது இந்திய அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி முடித்திருக்கிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி ஜனவரி 25ஆம் தேதி முதல் மார்ச் மாதம் நடுவில் வரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு மட்டும் இல்லாமல், இந்த தொடரின் முடிவுகள் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது.

மேலும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக அணுகி வருகின்ற காரணத்தினால், இந்தியாவில் எப்படி விளையாடுவார்கள்? என்கின்ற எதிர்பார்ப்பும் ஏக்கச்சக்கமாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்தத் தொடருக்கு இஷான் கிஷான் அதிரடியாகப் புறக்கணிக்கப்பட்டு, உத்திர பிரதேச மாநில அணியைச் சேர்ந்த 22 வயதான வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடுகிறார்.

- Advertisement -

தற்போது கிடைத்திருக்கும் இந்த பெரிய வாய்ப்பு பற்றி பேசி உள்ள அவர் ” இந்த தொடரில் இருந்து நான் முக்கியமாக கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு விஷயம், பெரிய கிரிக்கெட் மட்டத்தில் தொடர்ச்சியாக நம்மை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதுதான்.

நிறைய வீரர்கள் இந்திய அணிக்கு வாய்ப்பை பெறுகிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே எல்லாம் கடந்து நிலைத்து நிற்கிறார்கள். நீங்கள் ஒரு பெரிய மேடைக்கு வந்தவுடன் உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் மக்கள் உங்களை தொடர்ந்து மதிப்பிடுகிறார்கள்.

எனவே அணியில் இருக்கும் பெரிய நிரந்தர வீரர்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? விமர்சனங்களையும் அழுத்தங்களையும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதை நான் அறிய விரும்புகிறேன். இதை உள்வாங்கி நானும் முயற்சி செய்யப் போகிறேன்.

ஜெய்ஸ்வாலும் நானும் பின்னோக்கிச் சென்றால், இந்திய அண்டர் 19 கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடியிருக்கிறோம். அந்த நாட்கள் எப்பொழுதும் மிக வேடிக்கையாக இருந்திருக்கிறது. அந்த அனுபவங்களை மீண்டும் அவருடன் பகிர்ந்து கொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்ததும் முதலில் மெசேஜ் அனுப்பியவர்களில் அவரும் ஒருவர். அவருடைய வாழ்த்துச் செய்தியில் ‘நீங்கள் இதற்கு சரியான தகுதி உள்ளவர் பாய்.. உங்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்” என்று கூறியிருக்கிறார்.