“இவர் நேத்து விளையாடியதை பாத்து உலக கோப்பை வெல்ற நம்பிக்கை 110% வந்துடுச்சு” – மும்பை இந்தியன்ஸ் முன்னாள் வீரர் அபார நம்பிக்கை!

0
3522
ICT

இந்திய அணி தற்பொழுது பும்ரா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட, அயர்லாந்து மண்ணில் முகாமிட்டு இருக்கிறது!

இந்தத் தொடரில் நடைபெற்று முடிந்திருக்கின்ற இரண்டு போட்டிகளையும் இந்திய அணி பும்ரா தலைமையில் மிக அபாரமாக செயல்பட்டு வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. மேலும் அயர்லாந்து அணிக்கு எதிராக தோற்றதில்லை என்கின்ற சாதனையையும் தக்க வைத்து இருக்கிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் பும்ராவின் கேப்டன்சி மிகவும் முதிர்ச்சியானதாக இருந்தது. அதே சமயத்தில் அவர் களத்தில் மிகவும் ரியாக்சன் இல்லாமல் அமைதியாக, வீரர்களோடு வீரராக இருந்தார்.

முதல் போட்டியில் பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் வீசிய அவர், இரண்டாவது போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். காரணம் எதிரணி இலக்கை துரத்தும் பொழுது கடைசி கட்டத்தில் அவருக்கு ஓவர்கள் நிறைய இருப்பது நல்லது என்று முடிவு செய்தார்.

அதே போல் ஆடுகளம் மெதுவாக இருக்க சிவம் துபேவுக்கு இரண்டு ஓவர் கொடுத்தார். வாஷிங்டன் சுந்தரின் இரண்டாவது ஓவரை அழகாக கொண்டு வந்து காற்றுக்கு எதிர்த்திசையில் முடித்தார். அவர்கள் ரன் வேகத்தை அதிகரித்த பொழுது தனது இரண்டாவது ஓவரை வீசி அவர்களது மொமண்டத்தை தடுத்து நிறுத்தினார். இப்படி அவரது கேப்டன்சி நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் அவர் பந்துவீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “இந்திய நிர்வாகமும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் பும்ரா பந்துவீச்சை நேற்று பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் நம்பிக்கை 100% இருந்து 110% சதவீதமாக அதிகரித்து எங்கேயோ போய்விட்டதாக நான் நினைக்கிறேன்.

அவர் எடுத்ததும் 140 கிலோ மீட்டர் வேகத்தில் தனது பந்துவீச்சை துவங்கினார். இதன் மூலம் அவர் விளையாடுவதற்கு எவ்வளவு ஆவலுடன் இருக்கிறார் என்பதைத்தான் காட்டினார். கடந்த ஆட்டத்தில் அவுட் ஃபீல்டு ஈரமாக இருந்தது பற்றி அவர் கூறியிருந்தார். முதல் பந்திலேயே சரியான வேகத்தில் இருந்தார். பவர் பிளேவில் ஒரு ஓவர் மட்டுமே வீசி, மீதி ஓவர்களை 12, 17, 20 என்று தன்னை வித்தியாசமாக அவர் வைத்துக் கொண்டார்.

நேற்று அவர் இறுதிக்கட்ட ஓவர்களில் வீசியதற்கு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் தர வேண்டும். அவரது பந்துவீச்சில் தையல் ஒரு விதமான சாய்ந்த கோணத்தில் இருப்பதை பார்க்கலாம். அவர் ஆப் கட்டர் மற்றும் லெக் கட்டர் இரண்டையும் பயன்படுத்துகிறார். இதெல்லாம் சிறப்பான விஷயங்கள்!” என்று கூறி இருக்கிறார்!