“எனக்கு முதலில் ரோகித் சர்மா பற்றி இந்த அபிப்பிராயம்தான் இருந்தது” – விராட் கோலி பேட்டி

0
3130
Virat

இந்திய கிரிக்கெட்டில் தற்போது இரண்டு சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி. இன்னொருவர் அவருடைய சீனியரான ஹிட்மேன் ரோஹித் சர்மா.

ரோகித் சர்மா விராட் கோலிக்கு முன்பாக 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். மேலும் அந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இந்திய அணிகள் இடம்பெற்று மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடினார்.

- Advertisement -

விராட் கோலி 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு மூலம் அறிமுகமானார். அடுத்து இரண்டு வருடங்கள் கழித்து 2010 ஆம் ஆண்டுதான் அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தது. மேலும் அடுத்த ஆண்டு தான் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் கிடைத்தது.

மகேந்திர சிங் தோனி தலைமையில் ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை விளையாடி, கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். விராட் கோலி 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடி கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த வகையில் விராட் கோலிக்கு ரோகித் சர்மா இந்திய அணியில் சீனியர். மேலும் வயதிலும் அவரை விட கொஞ்சம் பெரியவர். எனவே விராட் கோலி ரோஹித் சர்மாவை இந்திய அணிக்கு தேர்வாகும் முன்பு வெளியில் இருந்து இந்திய அணியில் வைத்து பார்த்திருக்கிறார்.

- Advertisement -

அவர் முதன் முதலில் பேட்டிங் செய்வதை பார்த்த விராட் கோலி அவர் குறித்து என்ன அபிப்ராயம் கொண்டு இருந்தார் என்பது குறித்து, தற்பொழுது ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசி உள்ள விராட் கோலி கூறும் பொழுது ” அவர் விளையாடுவதை நீங்கள் பார்த்தால், அப்பொழுது அவர் குறித்து என்ன மாதிரி பாராட்டி பேசினார்களோ, அது ஏன் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர் விளையாடுவதை பார்த்த பொழுது, இதுவரை பந்தை அவர்போல டைமிங் செய்த யாரையும் பார்த்ததில்லை என்று தோன்றியது” என்று கூறியிருக்கிறார்.