“நான் உத்தரவாதம் தரேன்.. இந்தப் பையன் பெரிய ஸ்கோர் அடிப்பான்” – ராகுல் டிராவிட் நம்பிக்கை

0
227
Dravid

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி இருக்கிறார்.

இந்த நிலையில் அவருடைய இடத்தை மூத்த வீரர்களான ரகானே,
புஜாரா ஆகியோருக்கு தருவார்களா? இல்லை ரிங்கு சிங், ரஜத் பட்டிதார் போன்ற இளம் வீரர்களுக்கு தருவார்களா? என்கின்ற பெரிய கேள்வி இருக்கிறது.

- Advertisement -

மேலும் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் கில் என இரண்டு இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களோடு ஸ்ரேயாஸ் ஐயரும் பேட்டிங் யூனிட்டில் இருக்கிறார். அனுபவ வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் மட்டுமே பேட்டிங் யூனிட்டில் இருக்கிறார்கள்.

ஜெய்ஸ்வால் இந்திய டெஸ்ட் அணிக்குள் வந்ததுமே கில் தான் மூன்றாவது வீரராக விளையாட விரும்புவதாக கூறி இறங்கிக்கொண்டார். ஆனால் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்டிலும் அவரது பேட்டிங் சரியில்லை. இதற்கடுத்து கடினமான ஆடுகளம் கொண்ட தென் ஆப்பிரிக்காவிலும் அவரால் ரன்கள் அடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரையே தன்னை நிரூபிப்பதற்கு எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஜெய்ஸ்வாலும் பெரிய அணிக்கு எதிராக ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் கில் பேட்டிங் பற்றி பேசி உள்ள ராகுல் டிராவிட் ” கில் ஒரு சிறந்த வீரர். அவர் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கி இருக்கிறார். அவருக்கு நாம் சில காலம் கொடுக்க வேண்டும். சிலர் மட்டுமே தொடர்ச்சியாக வெற்றி பெறுவார்கள். கில் டெஸ்டில் ஆரம்ப நாட்களில் ஆஸ்திரேலியா போன்ற இடத்தில் சிறப்பாக செயல்பட்டவர்.

கில் ஆரம்பத்தில் சவாலான விக்கெட்டுகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் அவருக்கு கடைசி இரண்டு டெஸ்டில் கடினமான ஆடுகளாக பேட்டிங் செய்வதற்கு இருந்தது. இவர் எல்லாவற்றையும் சரியாக செய்து வருகிறார்.

இதையும் படிங்க :விராட் கோலி இல்லாதது நல்லதுதான்.. உதவ முடியாத நிலைமை” – டிராவிட் அதிரடி பேச்சு

மேலும் கில் கடுமையாக உழைக்கிறார். அவர் தன்னை மேம்படுத்த நேரத்தையும் முயற்சியையும் கொடுக்கிறார். கடந்த ஆண்டு அவர் எங்களுக்கு நல்ல இரண்டு சதங்கள் அடித்தார். ஒன்று பங்களாதேஷ் மற்றும் இன்னொன்று அகமதாபாத். நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் சில பெரிய ஆட்டங்களை விளையாடுவார்” என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.