“விராட் கோலி இல்லாதது நல்லதுதான்.. உதவ முடியாத நிலைமை” – டிராவிட் அதிரடி பேச்சு

0
279
Dravid

நாளை மறுநாள் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.

இந்த டெஸ்ட் தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்த, பும்ரா துணை கேப்டனாக இருக்கிறார்.

- Advertisement -

இந்தக் குறிப்பிட்ட டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் இசான் கிஷான் அணிதேர்வில் புறக்கணிக்கப்பட்டு இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் அதிரடியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் கடைசி நேரத்தில் விராட் கோலி தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது எனக் கூறி விலகி இருக்கிறார்.

இது சம்பந்தமாக விராட் கோலி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரிடமும் கலந்து பேசி முடிவெடுத்து இருக்கிறார். எனவே கிரிக்கெட்டை விட குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டியதை புரிந்து கொள்ள வேண்டும் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி இடம்பெறாதது குறித்து இன்று பேசி உள்ள பயிற்சியாளர் ராகுல் டிராவிட் “விராட் மாதிரி ஒரு தரமான வீரரை எந்த அணியுமே இழந்ததாகவே உணரும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது உங்களுக்கே தெரியும். அவர் ஒரு அற்புதமான வீரர். அவருக்காக அவர் செய்திருக்கும் சாதனைகள் பேசும்.

ஆனால் தற்பொழுது விராட் கோலி இல்லாத நிலையும் ஒரு நல்ல விஷயம்தான். இதனால் யாராவது இதை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு மேலே முன்னேறி செல்ல உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை… ரிஷப் பண்ட்டா இஷான் கிஷானா?.. ராகுல் டிராவிட் ஆச்சரியப்படுத்தும் பதில்

நிச்சயமாக எங்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் அவர் இருப்பதால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை. நான் சொன்னது போல நாங்கள் அவரை தவற விடுகிறோம். அதே சமயத்தில் இது வேறு சில வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு. அவர்களிடம் என்ன இருக்கிறது என்று எங்களாலும் தெரிந்து கொள்ள முடியும்” எனக் கூறியிருக்கிறார்.