போன சீசன் லக்னோல சேர்ந்து ஆடலாம், தெரிஞ்ச கேஎல் ராகுல் இருக்காரு அப்படின்னு நெனச்சேன்… என்னோட பிளானை மொத்தமா மாத்தி குஜராத்-க்கு ஆடவைத்ததே இவர் தான்; என்னோட வாழ்க்கையே மாறிடுச்சு – ஹர்திக் பாண்டியா!

0
2998

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆடும் எண்ணமே எனக்கு இல்லை. லக்னோ அணியில் சேரவேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது என சமீபத்திய பேட்டியில் ஹர்திக் பாண்டியா பேசியது பலரையும் அதிர்ச்சி உள்ளாகி உள்ளது.

கடந்த வருட ஐபிஎல் சீசனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டன. இந்த இரண்டு அணிகளுமே மிகச்சிறப்பாக செயல்பட்டு அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி வந்த முதல் வருடமே கோப்பையை தட்டிச்சென்றது.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா அந்த அணிக்கு கேப்டன் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு ஆச்சரியங்களும் திருப்புமுனைகளும் ரசிகர்களுக்கு அமைந்தது. அதுவரை கேப்டன் பொறுப்பை ஏற்றிராத அவர், முதல் முறையாக கேப்டனாக விளையாடி கோப்பையை பெற்றுத்தந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, இந்திய அணியில் இடம்பெற தடுமாறி வந்த அவருக்கு இப்போது டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பு கிடைக்கும் அளவிற்கு மாறியுள்ளது.

கடந்த சீசனில் குஜராத் அணிக்கு அதிக ரன்கள் அடித்தவராகவும் அவர் இருந்தார். இந்த வருடமும் நான்கு லீக் போட்டிகளில் மூன்று வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது குஜராத் அணி.

குஜராத் அணிக்கு பல வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, ‘கடந்த சீசனில் குஜராத் அணிக்கு சேரும் எண்ணமே எனக்கு இல்லை; லக்னோ அணிக்கு சேரலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். அவர்களுடன் தொலைபேசியிலும் பேசிட்டேன்.’ என சமீபத்திய பேட்டியில் கூறியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர் பேசியதாவது:

- Advertisement -

“எப்போதும் என்னுடைய அணியில் எனக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருக்க வேண்டும் அல்லது தெரிந்தவர்கள் அணியில் நான் விளையாட வேண்டும் என்று எண்ணுவேன். என்னுடைய ஆட்டம் தெரிந்தவர்களிடம் விளையாடுவது எனக்கு கொஞ்சம் எளியதாக இருக்கும் என்று எண்ணினேன்.

அந்த வகையில் எனக்கு தொலைபேசியில் அழைத்து பேசிய லக்னோ அணியில் இணைந்து விளையாடலாம், அங்கு எனக்கு தெரிந்த கே எல் ராகுல் கேப்டனாக இருக்கப்போகிறார் என்று முதலில் திட்டமிட்டிருந்தேன். அந்த நேரத்தில் ஆஷிஷ் நெக்ரா எனக்கு தொலைபேசியில் அழைத்து இப்படி குஜராத் என்ற ஒரு அணி வரப்போகிறது. அதற்கு நான் பயிற்சியாளராக சேரப்போகிறேன் இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் இதுதான் தகவல். ஆகையால் அந்த அணிக்கு நீ வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எனக்கு ஆஷிஷ் நெக்ராவை நன்கு தெரியும் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால் அவர் அழைத்த அந்த சமயத்தில் குஜராத் என்ற ஒரு அணி இன்னும் ஐபிஎல் இல் பதிவு செய்யப்படவே இல்லை. அந்த தயக்கமும் எனக்கு நிறைய இருந்தது. நான் இதுவரை என்னைப் பற்றி நான்கு தெரிந்தவர்களிடம் மட்டுமே விளையாடி உள்ளேன்.

ஆஷிஷ் நெக்ரா என்னைப் பற்றி நான்கு அறிந்தவர். அவர் கேட்கும் போது தயக்கமாக இருந்தது. ஏனெனில் அந்த காலகட்டத்தில் காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சில காலம் விலகி இருந்தேன். இந்த வருடம் விளையாட வேண்டாம் காயம் முழுமையாக குணமடையட்டும் என்கிற தயக்கத்திலிருந்தும் என்னால் வெளிவர முடியவில்லை.

மேலும் அவரிடம், ‘எனக்கு இந்த வருடம் மிகவும் முக்கியமானது. ஆகையால் என்னிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்றும் கேட்டேன்.’ பின்னர் இதைப் பற்றி நான் யோசித்து சொல்கிறேன் என உடனடியாக தொலைபேசி அழைப்பு துண்டித்து விட்டேன். அந்த நேரத்தில் அவரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது அதில், ‘உனக்கு நம்பிக்கை இருந்தால் அந்த அணியின் கேப்டனாக உன்னை பரிந்துரைக்கிறேன்.’ என்றார்.

நான் அவ்வளவு எளிதாக யாருக்கு கீழேயும் பணிபுரிய மாட்டேன். சுதந்திரமாக செயல்பட விரும்புவேன் என அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. அதற்காக இப்படி சொல்கிறாரோ என்று நினைத்தேன். பின்னர் அதிகாரப்பூர்வமாக பல விஷயங்கள் நடந்த பின்பு,, என்னை கேப்டன் ஆக அறிவித்த பின்பு தான் கனவெல்லாம் நனவு தான் என்று புரிந்ததது.” என்று ஹர்திக் பாண்டியா பகிர்ந்து கொண்டார்.