“நெட் ப்ராக்டிஸ்ல பார்த்துதான் வாய்ப்பு கொடுத்தேன்.. கச்சிதமா முடிச்சுட்டாங்க!” – கேப்டன் பாபர் அசாம் பேச்சு!

0
2977
Babar

இன்று பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது ஆட்டத்தில், இலங்கை அணியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சந்தித்து விளையாடியது. இந்த போட்டியில் உலக சாதனையோடு பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு மெண்டிஸ் மற்றும் சதிரா இருவரும் சதம் அடித்தார்கள்.

- Advertisement -

பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் மற்றும் பாபர் ஆஸம் இருவரும் ஏமாற்ற, இன்று வாய்ப்பு தரப்பட்ட அப்துல்லா ஷபிக் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 344 ரன்கள் சேஸ் செய்ததன் மூலம், 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்னை சேட் செய்த அணி என்ற உலக சாதனையை படைத்து இலங்கை அணியை வென்றிருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் துவக்க இடத்தில் அப்துல்லா சபிக் மற்றும் மிடில் ஆர்டரில் சவுத் ஷகீல் இருவரும் வந்திருக்க பாகிஸ்தான் அணி தற்பொழுது கொஞ்சம் பலமானதாக தெரிகிறது.

- Advertisement -

இந்த நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ” எல்லாப் புகழும் அணியின் வீரர்களுக்கு. குறிப்பாக அப்துல்லா மற்றும் ரிஸ்வான் இருவருக்கும். அவர்கள் ஆட்டத்தை கட்டி எழுப்பிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. மெண்டிஸ் மிக அருமையாக பேட்டிங் செய்தார். அவர் ஒரு சிறப்பான ஆட்டம் ஆடினார். இறுதியில் நாங்கள் நன்றாக முடித்தோம்.

அப்துல்லா ஷபிக் விளையாடும் விதத்தில் மகிழ்ச்சி. வலைப்பயிற்சியில் அவரைப் பார்த்தேன். அவரிடம் ரன் எடுப்பதற்கான பசி இருக்கிறது. அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நினைத்தேன். கொடுத்த வாய்ப்பை அவர் மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக எங்களுக்கு மிகச் சிறப்பான ஆதரவு அளித்து வந்த ஹைதராபாத் மக்களுக்கு எங்களுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று கூறி முடித்திருக்கிறார்!