தோனிக்கு அடுத்த கேப்டன் சிஎஸ்கே டீம்லயே இருக்காரு; வேறு எங்கேயும் தேடவேண்டாம் – முன்னாள் வீரர் கருத்து!

0
2488

“தோனிக்கு அடுத்த கேப்டன் சிஎஸ்கே அணியிலேயே இருக்கிறார். வேறு எங்கேயும் தேட வேண்டாம்” என்று இளம் வீரரை குறிப்பிட்டு பேசியுள்ளார் வாசிம் ஜாஃபர்.

டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்றவுடன் அடுத்து ஓரிரு தினங்களிலேயே ஐபிஎல் 2023-ஆம் ஆண்டுக்கான வீரர்கள் பற்றிய பேச்சுகளே இடைவிடாமல் அடிபட்டு வருகின்றன. ஏனெனில் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களை நவம்பர் 15 ஆம் தேதி மாலை பட்டியலிட்டு வெளியிட்டது.

- Advertisement -

பல அணிகளில் முக்கியமான வீரர்கள் என கருதப்பட்டவர்களே வெளியேற்றப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை அணியில் பிராவோ நீக்கப்பட்டு இருக்கிறார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் சென்னையின் ஒரு அங்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜாவும் வெளியேற்றப்பட்டு விடுவாரோ? என்ற அச்சம் நிலவியது. ஆனால் தோனி தலையிட்டு சுமூகமாக முடித்ததால் ஜடேஜாவை சிஎஸ்கே தக்க வைத்திருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, மற்றொரு பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. அது மகேந்திர சிங் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் என்பது.

- Advertisement -

ஒருவேளை அவர் ஓய்வு பெற்றால், அடுத்த கேப்டனாக ஜடேஜா இருப்பாரா? என யோசிக்கும் பொழுது, கடந்த ஐபிஎல்-இல் நேர்ந்த மறக்க கூடிய சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

ஆகையால் அவர் இல்லாமல் வேறொருவரை கேப்டனாக நியமிக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் நிச்சயம் முடிவு செய்யும். அதில் தோனி தலையிட்டு சில ஆலோசனைகளையும் கூறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

முன்னாள் வீரர்கள் பலர் இந்த விவகாரத்தில் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வாசிம் ஜாஃபர் கூறியதாவது:

“சிஎஸ்கே அணிக்கு அடுத்த விக்கெட் கீப்பராக டெவான் கான்வாய் இருப்பார் என நினைக்கிறேன். சர்வதேச அனுபவத்தையும் பெற்றவராக இருக்கிறார். தோனி அமைதியாக இல்லாமல் நிச்சயம் அடுத்ததாக யார் வரவேண்டும் என்பது பற்றி முழு சிந்தனையுடன் இருப்பார் என நினைக்கிறேன்.

தோனி இருந்ததைப் போன்று பல ஆண்டுகள் கேப்டன் பொறுப்பில் இருக்கும்படி ஒருவரை தேர்வு செய்ய நேரிடும். அவர் எளிமையான வீரராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் ருத்ராஜ் கெய்க்வாட் மீது கவனம் செலுத்தக்கூடும்.

அவர் சமீபத்தில் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார். இளம் வீரராகவும் இருக்கிறார். அவரை நியமித்தால் இன்னும் சில ஆண்டுகள் அவரால் தொடர்ந்து செயல்பட முடியும். துவக்க வீரராக இருந்து பொறுப்புடன் விளையாடி வருகிறார் தோனியை போல மிகவும் அமைதியான வீரராகவும் இருக்கிறார்.” என பேட்டியளித்தார்.