“நான் எப்படியோ தப்பிட்டேன்.. இளம் வீரர்கள் இதுல மாட்டிக்காதிங்க” – ஏபி டிவில்லியர்ஸ் எச்சரிக்கை!

0
4184
AB devilliers

உலக கிரிக்கெட்டில் சிலர் இடங்கள் என்றுமே நிரப்பப்படாமல் இருக்கும். அவர்கள் அவ்வளவு தனித்துவமான வீரர்களாக இருந்திருப்பார்கள். அப்படியான ஒரு வீரர் தான் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ்!

நவீன கிரிக்கெட் காலத்தின் துவக்கம் விவ் ரிச்சர்ட்ஸ் இடம் ஆரம்பித்து சச்சின் கைகளில் அது முழுமை பெற்றது. அதேபோல அதிநவீன கிரிக்கெட் காலத்தின் துவக்கமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் இருந்தார். அந்தக் காலகட்டத்தின் மிக உச்ச செயல்பாட்டைக் கொண்டிருந்தவராக ஏபி டிவில்லியர்ஸ் இருந்தார்.

- Advertisement -

தற்பொழுது ஏபி டி வில்லியர்ஸ் தான் விளையாடிய காலத்தில் ஒரு விஷயத்தை தவறுதலாக செய்ததாகவும், அதை இளம் வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டாம் என்றும், அது மிகவும் ஆபத்தானது என்றும் வெளிப்படையாக மனம் திறந்து வேண்டுகோளையும் எச்சரிக்கையையும் முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசுகையில் ” பெரிய போட்டிகளுக்கு முன்பு எனக்கு சரியாக தூக்கம் வராது. உண்மையில் தூங்க முடியாமல் தவித்தேன். தூக்க மாத்திரைகள் எனக்கு உதவி செய்வதாக இருந்தது. ஆனால் இதுவெல்லாம் சில நாட்களில் பிரச்சனையாக மாறக்கூடியது. ஏனென்றால் தூக்க மாத்திரைகள் உங்களை தூங்க வைக்காது. அது உங்களை உங்களுடைய சிறிது கவலையை நீக்கி நீங்கள் ஒரு நல்ல இடத்தில் இருப்பதாக உணர மட்டுமே வைக்கிறது.

2015 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடுவதற்கு முந்தைய இரவு அது. அந்தப் போட்டியில் நான் சதம் அடித்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய சிறந்த போட்டிகளில் அதுவும் ஒன்று.

- Advertisement -

ஆனால் அந்தப் போட்டிக்கு முந்தைய இரவு நான் வெறும் இரண்டு மூன்று மணி நேரங்கள் மட்டுமே தூங்கினேன். டாக்டரை என் அறைக்கு அழைத்து ஊசி போட்டுக் கொண்டேன். என்னால் தூங்க முடியவில்லை. எனக்கு வயிற்றுப் பிடிப்புகள் இருந்தது. இது முற்றிலும் கவலை மற்றும் மன அழுத்தத்தால் வரக்கூடியது. பெரிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற அழுத்தம் இது.

பெரிய போட்டிகளுக்கு முன்பாக நான் என்னுடைய ஹோட்டல் அறையில் தனிமையில் நன்றாக விளையாட வேண்டும் என்று யோசித்து யோசித்து மன சுமையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தேன். இதனால் தூக்கம் என்னை விட்டு தூரம் போயிருந்தது. இதற்காக நான் தூக்க மாத்திரைகளை எடுக்க ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் நாம் பெரிய போட்டிகளுக்கு முன்பாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க தூக்கத்திற்கு செல்ல இதை பயன்படுத்துவோம். ஆனால் நாளடைவில் இது நமக்குத் தேவையில்லாத பொழுதும் நாம் பயன்படுத்தும் படி நம்மை அடிமையாக்கி விடும். இதுதான் இதில் பிரச்சனையாக மாறும் விஷயம். அதிர்ஷ்டவசமாக நான் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளாக இதை நிலைப்படுத்தி வெளியில் வந்து விட்டேன். கொஞ்சம் நன்றாக இருந்தாலும் இது ஆபத்தான ஒன்று.

இப்படி உங்களுக்கு ஏதாவது நடந்தால் நீங்கள் அதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும். நான் என் தொழில் முறை வாழ்க்கையில் இப்படி செய்யாமல் தவறு செய்தேன். நான் என் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் என் பலவீனத்தை காட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் பேசுவதும் யாரிடமாவது பகிர்ந்து கொள்வதும் மிகவும் முக்கியமான ஒன்று.

இதைச் சரிப்படுத்த நல்ல உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சரியான முறையில் உடற்பயிற்சிகள் செய்து வர வேண்டும். இரவில் கிடைக்கும் நல்ல ஓய்வு அடுத்த நாள் போட்டிகளில் பெரிய வெற்றிகளை கொண்டு வரும்!” என்று அவர் கூறியிருக்கிறார்!