சி.எஸ்.கே தவிர்த்து வேறு எந்த அணியிலும் விளையாடும் எண்ணம் எனக்கு இல்லை ; காரணம் இதுதான் – விளக்கம் அளித்துள்ள ராயுடு

0
1595
Ambati Rayudu CSK

ஐபிஎல் தொடரின் 2010ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாடினார். சுமார் 114 போட்டிகளில் அவர் 14 அரை சதங்களுடன் 2416 ரன்கள் குவித்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரது பேட்டிங் ஆவெரேஜ் 27.15 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 126.16 ஆகும்.

2018 ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை கைப்பற்றியது. சென்னை அணிக்காக முதலாண்டே மிக அற்புதமாக விளையாடி 602 ரன்கள் குவித்தார். அந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்ற பேட்டிங்கில் மிகப்பெரிய அளவில் ராயடு கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை 61 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 7 அரைசதம் உட்பட 1500 ரன்கள் ராயடு குவித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 34.09 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.65 ஆகும்.

சென்னையை தவிர்த்து வேறு எந்த அணியையும் நினைத்து பார்க்க முடியாது

இந்த ஆண்டு மெகா ஏலத்தில் அம்பத்தி ராயுடு எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இது சம்பந்தமாக சமீபத்தில் பேசியுள்ள அவர், “தற்போது வேறு அணியில் விளையாடும் எண்ணம் எனக்கு இல்லை. சென்னை அணியை தாண்டி வேறு எந்த அணியையும் என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை.

2017ம் ஆண்டு எனக்கு குருத்தெலும்பில் மிகப்பெரிய பிரச்சினை இருந்தது. அந்த ஆண்டு என்னால் சரியான வகையில் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து அதற்கு அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது. என் மீது நம்பிக்கை வைத்த சென்னை அணியை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது”.

- Advertisement -

அதுமட்டுமின்றி இறுதியாக, “என்னால் மீண்டும் சென்னை அணியில் களமிறங்கிய என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது”, என்று கூறியுள்ளார். சென்னை அணி ரசிகர்களும் அம்பத்தி ராயுடுவை சென்னை அணி கைப்பற்றினால் சரியான முடிவாக இருக்கும் என்பது சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.