“இந்த வீரருக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்றே நினைக்கிறேன்!” – தினேஷ் கார்த்திக் பரபரப்பு கணிப்பு!

0
178
DK

பங்களாதேஷ் சென்றுள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 1-2 என ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. இதை அடுத்து இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது!

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இந்திய அணியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த இரண்டு போட்டிகளையும் வென்று இதற்கடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தினால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்த நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்ட்ப்ரீத் பும்ரா, முகமது சமி மற்றும் அனுபவ சுழற்பந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மேலும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறாத நிலையில், இளம் வீரர்களான அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார், முகேஷ் குமார் மற்றும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வரும் இடது கை வேகம் பந்துவீச்சாளர் உனட்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்!

இந்திய உள்நாட்டு சிவப்புப்பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வேகப்பந்துவீச்சாளர் உனட்கட் 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியா அணி சுற்றுப்பயணம் செய்திருந்த போது அந்தத் தொடரில் இடம் பெற்று, அதற்குப் பிறகு இத்தனை ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இந்து அணியில் கிடைக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

தற்பொழுது இந்த நிலையில் அவரது வாய்ப்பு பற்றி பேசி உள்ள தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” உனட்கட் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று நினைக்கிறேன். நேர்மையாகச் சொல்வதாக இருந்தால் உமேஷ் யாதவ், முகமது சிராஜ், சர்துல் தாக்கூர் ஆகியோர் விளையாடவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த தொடரில் இவர்கள் விளையாடத்தான் இடமும் இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் உனட்கட்டுக்கு அணியில் இடம் கிடைத்திருப்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம். மேலும் இதற்கடுத்து ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் தொடரில் முகமது சாமி மற்றும் ஜஸ்ட்ப்ரீத் பும்ரா அணிக்கு திரும்பும் பொழுது இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக் ” இவரது கதை நிச்சயம் இதயத்தை நெகிழ்த்தும் ஒரு கதை. உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகவும் தகுதி வாய்ந்த திறமையான ஒரு வேகப்பந்து வீச்சாளராக இவர் திகழ்ந்து வருகிறார். ராஜ்கோட் மைதானம் எப்படியானது என்று நமக்குத் தெரிந்த நிலையில் அங்கு இவர் நல்ல எண்ணிக்கையில் விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பெரிய உதவியாக இருந்து வருகிறார். வெற்றி பெற இவரது இந்த செயல்பாடு அணியை வழிநடத்தியது ” என்று பாராட்டி புகழ்ந்து பேசி உள்ளார்!